திமுக என்பது துரோக கும்பல், துரைமுருகனை டாராக்கிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 1, 2021, 12:26 PM IST
Highlights

மேலும் பேருந்து நிலையங்களில் அரசு விளம்பரப் படங்களை வைப்பதுதான் அரசு செய்த சாதனை என்றும் திமுகவை அவர் சாடினார். துரைமுருகன் எம்ஜிஆரை துரோகி என்று பேசிய பேச்சுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவரை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்றார்.

திமுக என்ற ஒரு கட்சியே துரோக கும்பல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான் என்றும், அவர் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்திருக்காது எனவும் அவர் கூறினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94 ஆவது பிறந்த  தினம் அவரது ரசிகர்களால் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாஜி கணேசனின் புகழை கௌரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் சிவாஜிகணேசனின் திருவுருவப் படத்தை வைத்து அவரின் பெருமையை அங்கீகரித்துள்ளது. 

இந்நிலையில்  சென்னை அடையாறில் உள்ள  சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு  அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபலங்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில்  அவரது திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அதை தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவித்தது அதிமுக அரசு என்றார்.

மேலும் பேருந்து நிலையங்களில் அரசு விளம்பரப் படங்களை வைப்பதுதான் அரசு செய்த சாதனை என்றும் திமுகவை அவர் சாடினார். துரைமுருகன் எம்ஜிஆரை துரோகி என்று பேசிய பேச்சுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவரை சீண்டுவது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்றார். மேலும் கருணாநிதியை முதலமைச்சராக அடையாளம் காட்டியது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தான், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இல்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்தே இருக்காது என்றும், திமுக என்பது துரோகக் கும்பல் என்றார்.
 

click me!