ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்க அஞ்சு நடுங்கும் திமுக.. ஆளுங்கட்சியை அலறவிடும் சீமான்..!

By vinoth kumarFirst Published Oct 1, 2021, 12:01 PM IST
Highlights

திமுக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் தீர்மானங்களை மத்திய அரசு மதிப்பதில்லை. 7 பேர் விடுதலை தொடர்பாக இயற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்கவில்லை. அப்படி மத்திய அரசு மதிக்காதபோது மத்திய அரசு போடும் சட்டங்களை தமிழக அரசு மதிக்காமல் இருக்க வேண்டும்.

இரண்டு கட்சியை பொறுத்தவரையில் ஆள் மாறுமே தவிர ஆட்சி மாறாது. இவங்க வந்தாலும் ஓட்டுக்கு காசு, அவங்க வந்தாலும் ஓட்டுக்கு காசு என திராவிட கட்சிகளை சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் விடுப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அடுத்த கோலியனூரில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில்;- ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் குறிப்பிடும் அளவில் எந்த திட்டத்தையும் திமுக செயல்படுத்தவில்லை. அதிமுக, திமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒரே கொள்கையைத் தான் கொண்டுள்ளன. பழனிசாமிக்கு பதில் தற்போது மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். ஆட்சி மாற்றத்தால் எந்த பயனும் கிடையாது. 

 கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 12 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளோம். மக்கள் மத்தியில் வளர்ச்சியை எட்டி வருகிறோம். எங்களின் நோக்கம், சீட்டை கைப்பற்றுவது இல்லை. நாட்டை கைப்பற்றுவது என்றார். திமுக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரும் தீர்மானங்களை மத்திய அரசு மதிப்பதில்லை. 7 பேர் விடுதலை தொடர்பாக இயற்றப்பட்ட தீர்மானத்தை மதிக்கவில்லை. அப்படி மத்திய அரசு மதிக்காதபோது மத்திய அரசு போடும் சட்டங்களை தமிழக அரசு மதிக்காமல் இருக்க வேண்டும்.

நாம் தமிழர் வேட்பாளர்களை இந்த உள்ளாட்சித் தேர்தலின்போது வாபஸ் பெறும்படி கூறியதும், மிரட்டப்படுவதும் உண்மைதான். செஞ்சி தொகுதியில் ஒன்றிய செயலாளரை கடத்திச்சென்று வாபஸ் பெற வைத்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்க திமுக ஏன் பயப்படுகிறது என்று தெரியவில்லை. விவசாயத்தை வாழ வைக்க வேண்டுமென்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.

click me!