திமுக அரசு சொன்னதை செய்யும்... மு.க. ஸ்டாலின் அரசு மீது அசைக்க முடியாத நம்பிக்கையில் நடிகர் விஷால்.!

By Asianet TamilFirst Published Aug 29, 2021, 9:59 PM IST
Highlights

திமுக ஆட்சியின் செயல்பாடு மேலும் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களுக்கும் இருக்கிறது. திமுக சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
 

தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஷால், சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தயவு செய்து போஸ்டர்கள், கட்அவுட்கள் வைக்காதீர்கள் என ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அந்தப் பணத்தில் இயலாதவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுங்கள். அந்தப் புண்ணியம் உங்கள் குடும்பத்துக்குச் சேரும். ஒரு ரசிகனாக வடிவேலு அண்ணனை ரொம்பவே மிஸ் செய்கிறேன்.  இக்கட்டான சூழலில் கவுண்டமணி அண்ணன், வடிவேலு அண்ணன் காமெடியைத்தான் பார்ப்பேன். வடிவேலு அண்ணன் மாதிரி ஒரு குடும்பத்தையே குஷிப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. அவர் மீண்டும் நடிக்க வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஜிஎஸ்டி வரி, உள்ளாட்சி வரி என இரண்டும் கட்டும் ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே உள்ளது. அதை மாற்றினால் மிகவும் நன்றாக இருக்கும். அனைவருடைய வாழ்க்கையிலும் ஒன்றரை வருடங்கள் அழிந்துவிட்டது. திரை உலகிற்கு நல்லது நடக்கும் என பெரிதும் நம்புகிறேன். நண்பர் உதயநிதி எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். கண்டிப்பாக திரைத்துறைக்கு நல்லது செய்வார்கள் என முழுமையாக நம்புகிறேன்.
ஸ்டாலின் நல்லாட்சி கொடுப்பார் என்றுதான் மக்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். திமுக ஆட்சியின் செயல்பாடு மேலும் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மக்களுக்கும் இருக்கிறது. திமுக சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். ஏதோ அதிமுகவுக்கு எதிராகச் சொல்கிறேன் என்று அல்ல. ஹைதராபாத்தில் நான் இருக்கும்போது கூட ஸ்டாலின், உதயநிதியைப் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.  நிச்சயம் தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்” என்று விஷால் தெரிவித்தார்.
 

click me!