”எடப்பாடியால்தான் மேட்டூர் அணை நிரம்புகிறது” - புதுக்கதை சொல்லும் தம்பிதுரை...!

 
Published : Sep 30, 2017, 06:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
”எடப்பாடியால்தான் மேட்டூர் அணை நிரம்புகிறது” - புதுக்கதை சொல்லும் தம்பிதுரை...!

சுருக்கம்

The Deputy Speaker Thambidurai said the water level of Mettur Dam has increased since the Tamil Nadu Chief Minister Edappadi Palinasamy took over.

தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகுதான் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது என  மக்களைவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அதிகப்படியான நீர்வரத்து காரணமாக, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் அளவு படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்தும் உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை கடந்தது. இந்நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 92.72 அடியை எட்டியுள்ளது.

இதைதொடர்ந்து பாசனத்திற்காக அக்டோபர், 2 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. 

இதில், எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து விழாவில் பேசிய மக்களைவை துணை சபாநாயகர் தம்பிதுரை தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பிறகுதான் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது என  தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..