Breaking News: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.. தபால் வாக்குகள் எண்ணும் பணி தீவிரம்.. சற்று நேரத்தில் முடிவு.

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 8:17 AM IST
Highlights

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம்  மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.   

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம்  மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.  கொரோனா கட்டுப்பாடுகளுடன் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  வழக்கம்போல முதற்கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது.  இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. 

அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தங்கு தடை இன்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளது. வழக்கம் போல முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு  வருகிறது அதை எடுத்து மின்னணு வாக்கு பட்டியலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட உள்ளது.  காலை 9:30  மணிக்கு முதல் சுற்று ரிசல்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் மொத்தம்  5,64, 253  தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் கடந்த 2016ம் ஆண்டு 3,30,380   வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு இரண்டு மடங்கு தபால் வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்ளது. இந்நிலையில் தபால் வாக்குகளை என்ன 4 மேஜைகளில் இன்னும் வாக்குகளை என்ன 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளது.  தபால் வாக்குகளை பொறுத்தவரையில் யார் முன்னிலை என்பது சற்று நேரத்தில் தெரியும்.  

 

click me!