5 மாநிலத் தேர்தல் முடிவு.. ஆட்சி கைப்பற்றப்போவது யார்.. இன்னும் சற்று நேரத்தில் ..

By Ezhilarasan BabuFirst Published May 2, 2021, 8:06 AM IST
Highlights

ஐந்து மாநிலத்திற்கும் தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றாலும், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. அதற்காக தயார் நிலையில் உள்ள தேர்தல் ஆணையம்,  அதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதைப் போலவே கேரளா, புதுவை, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் என ஐந்து மாநில தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடந்துள்ள நிலையில், தற்போது அது உச்சம் அடைந்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.  இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்வதற்கு மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தமிழகம் உள்ளிட்ட 5  மாநில சட்டசபைக்கான ஆயுட்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது, எனவே புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது.

 

தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்திற்கு 8 கட்டமாகவும், ஆசாமிக்கு மூன்று கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது . இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கி எண்ணும் மையங்களில்  பாதுகாக்கப்பட்டு வந்தது.  ஐந்து மாநிலத்திற்கும் தேர்தல்கள் வெவ்வேறு நாட்களில் நடைபெற்றாலும், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. அதற்காக தயார் நிலையில் உள்ள தேர்தல் ஆணையம்,  அதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் 118 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும். அதேபோல அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில், அதாவது 294 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 148 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சி அமைக்கும். இதில் வெல்லப்போவது திரிணாமுல் காங்கிரசா அல்லது பாஜகவா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

கேரளத்தில் மொத்தம் 140 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அங்கே 71 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும், அந்த வழியில் அங்கே காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் இடைய கடும் போட்டி இருந்துவரும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் ஆட்சியை கைப்பற்ற போவது யார் என்ற முடிவு தெரியும். 126 தொகுதிகளை கொண்ட அசாமில் 64 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும்,  அதேபோல 30 தொகுதிகளை கொண்ட யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 17 தொகுதிகள் தேவை.  இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!