தமிழக சட்டமன்ற தேர்தல்.. 3வது இடத்தை பிடிக்கப்போது யார்? 3 கட்சிகள் இடையே கடும் போட்டி..!

By vinoth kumarFirst Published May 2, 2021, 8:13 AM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 முனை போட்டி நிலவுவதால் 3வது இடத்தை பிடிப்பதில் டிடிவி.தினகரன், கமல்ஹாசன், சீமான் இடையே கடும் போட்டி ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 முனை போட்டி நிலவுவதால் 3வது இடத்தை பிடிப்பதில் டிடிவி.தினகரன், கமல்ஹாசன், சீமான் இடையே கடும் போட்டி ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இந்த முறை தேர்தல் களத்தில் திமுக, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய 5 முனை போட்டிகள் நிலவியது. இந்த அணிகள் சார்பில் 5 பேர் முதல்வர் வேட்பாளர்களாக களம் கண்டனர். திமுக கூட்டணி சார்பில் மு.க.ஸ்டாலின், அதிமுக கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிசாமி, அமமுக கூட்டணியில் டிடிவி.தினகரன், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக முன் நிறுத்தப்பட்டனர்.   

5 முனை போட்டி இருந்தாலும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் திமுக, அதிமுகவே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், டிடிவி.தினகரன், கமல்ஹாசன், சீமான் ஆகியோரில் யார் 3ம் இடத்திற்கு கடும் போட்டியை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதேபோல், 3ம் இடத்திற்கு போட்டியிடும் கட்சிகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்குகளையே அதிகம் பிரிக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக, டிடிவி.தினகரன் அதிமுகவின் வாக்கு வங்கியை அதிகம் பிரிப்பார் என கருதப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமமுக 5.5 சதவீதம், நாம் தமிழர் கட்சி 3.89 சதவீதம், மக்கள் நீதி மய்யம் 3.72 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. எனவே, இந்த மூன்று கட்சிகளில் எந்த கட்சி 3ம் இடத்தை பிடிக்கும் என்பது இன்று மாலைக்குள் இறுதியாகிவிடும்.

click me!