கேட்டபோதெல்லாம் அரசுக்கு பணத்தை வாரி வழங்கிய நிறுவனம்: பங்குகளை விற்கும் முடிவை மாற்றிக் கொள்ள மோடிக்கு கடிதம்

By Ezhilarasan BabuFirst Published Sep 1, 2020, 10:41 AM IST
Highlights

1956 ஆம் ஆண்டில் 5 கோடி அரசு முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்ஐசி பின்னர் சட்ட தேவைகளுக்காக ரூபாய் நூறு கோடிகளாக அதன் மூலதனம்  உயர்த்தப்பட்டாலும் எந்த ஒரு நேரத்திலும் அரசிடமிருந்து எல்ஐசி கூடுதல் மூலதனத்தை எதிர் பார்த்ததே கிடையாது.

எல்ஐசி பங்கு விற்பனை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என (சிபிஎம்) மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதன் முழு விவரம்:- இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் இந்தியாவின் பிரம்மாண்டமான நிதிநிறுவனம், செப்டம்பர் 1 அன்று 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. 64 ஆண்டுகளாக நாட்டின் நிர்மாணப் பணிகளுக்கு எல்ஐசியின் பெரும் பங்களிப்பு மகத்தானது. இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் துவங்கி 13வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் ஆண்டு வரை எல்ஐசியின் மொத்த  பங்களிப்பு 34 லட்சம்  கோடிகளை கடந்துள்ளது. அரசு நிறுவனமான இதன் வெற்றி ஆயுள் காப்பீட்டு தொழிலுக்கு மட்டுமின்றி எல்லா தொழில் நிறுவனங்களுக்குமே ஒரு  சீரிய முன்னுதாரணமாகும். 

1956 ஆம் ஆண்டில் 5 கோடி அரசு முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்ஐசி பின்னர் சட்ட தேவைகளுக்காக ரூபாய் நூறு கோடிகளாக அதன் மூலதனம்  உயர்த்தப்பட்டாலும் எந்த ஒரு நேரத்திலும் அரசிடமிருந்து எல்ஐசி கூடுதல் மூலதனத்தை எதிர் பார்த்ததே கிடையாது. அவ்வளவு சிறிய மூலதன தளத்தில் எல்ஐசி என் சொத்து மதிப்பு 35 லட்சம் கோடிகளாக இன்றைய நாளில் வளர்ந்துள்ளது. இது  எல்ஐசியின் பளிச்சிடும் சாதனையாகும். அரசு உத்திரவாதம் இருந்தபோதிலும் ஒரு முறை கூட அதை எல்ஐசி பயன்படுத்தியது இல்லை. இந்த மாபெரும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எல்ஐசியின் சிறகுகள் விரிந்துள்ளன. அதன் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகவில்லை, உலகம் முழுவதும் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் 42 கோடி பாலிசிகளோடு எல்ஐசி எட்டியுள்ள உயரம் ஒப்பிட இயலாத ஒன்று. ஆயுள் காப்பீட்டு தொழில் என்பது வாக்குறுதிகளை பாலிசிதாரர்களுக்கு விற்பது என்பதை  தாங்கள் அறிவீர்கள். அத்தகைய விரிந்த பாலிசி தளம் இருக்கும் நிலையில், எல்ஐசி 98 சதவீத உரிமை பட்டுவாடாவை, 2018-2019 நிதி ஆண்டில் எப்படி உள்ளது. 2019-20 இல் குரலாக ஊரடங்கு காலம் கடைசி வாரங்களில் குறிப்பிட்ட போதும் இழப்பு உரிமைகளில் 95 சதவீதத்தை எட்டியுள்ளது. 

வேகமாக வளர்கிற  நாடுகளின் ஆதார தொழில்  வளர்ச்சிக்கு உள்நாட்டு சேமிப்பு திரட்டல் மிகச் சிறந்த வழிமுறை என்பதை எல்ஐசி நிரூபித்துள்ளது. இந்திய ரயில்வே  நிதி தேவைகளுக்காக எல்ஐசியை அணுகியபோது, 1.5 லட்சம் கோடிகளை அதாவது ஆண்டுக்கு 30 கோடிகள் வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு தருவதாக உடனே உறுதி தந்தது. அதேபோன்று நெடுஞ்சாலை, குடிநீர் திட்டங்கள், போக்குவரத்து, பாலங்கள், துறைமுகம் மேம்பாடு, நீர்ப்பாசனம், மின்சாரம் என ஆதார தொழில்களுக்கு பெரும் நிதி ஆதாரங்களை தந்துள்ளது. ஒரு நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு வேறு என்ன வேண்டும்? இந்த நாளில் உங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லாத எல்ஐசி பங்கு விற்பனை முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன் என்று அந்த கடிதத்தில் பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.  
 

click me!