தமிழகத்தில் இன்று முதல் சுங்க கட்டணம் அதிரடி உயர்வு..!! கொரோனா கொடூரத்தில் வசூல் வேட்டை ஆரம்பம்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 1, 2020, 10:25 AM IST
Highlights

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன, இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.  தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன, இதில் 20 இடங்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வதாக அறிவிக்கப்பட்டது.  சேலம் மாவட்டத்தில் ஓமலூர், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி,  நத்தக்கரை, வைகுண்டம் பகுதியிலும் திருச்சி மாவட்டத்தில் சமயபுரம், பொன்னம்பலபட்டி, திருப்பராய்த்துறையில் உள்ள சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

இவை தவிர புதூர், பாண்டியாபுரம், எலியார்பதி, கொடைரோடு, வேலன் செட்டியூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கண்டனம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வாகனங்களில் தரத்திற்கு ஏற்ப 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. திண்டிவனம் முதல் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூர நான்கு வழிச்சாலையை பராமரித்து வரும்  உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் வாகனங்களுக்கு விக்கிரவாண்டியில் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. 

ஆனால், நடப்பாண்டில் கொரோனா பரவல் காரணமாக கட்டணத்தை உயர்த்த போவதில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அறிவுறுத்தலின்படிஇந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் சரக்கு வாகனங்களில் வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
 

click me!