என்னை கண்டால் எடப்பாடியே சிறுநீர் கழிப்பார்... தரக்குறைவாக பேசிய அனுமன் சேனா தலைவர்..!

Published : Sep 01, 2020, 10:25 AM IST
என்னை கண்டால் எடப்பாடியே சிறுநீர் கழிப்பார்... தரக்குறைவாக பேசிய அனுமன் சேனா தலைவர்..!

சுருக்கம்

என்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார் என அனுமன் சேனா தலைவர் ஸ்ரீதரன் முதல்வரை தாக்கி பேசியுள்ள விவகாரம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.  

என்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார் என அனுமன் சேனா தலைவர் ஸ்ரீதரன் முதல்வரை தாக்கி பேசியுள்ள விவகாரம் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

சில நாட்களுக்கு முன் சிவனடியார் சரவணனை காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தன்னை தகாத வார்த்தையில் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் தான் தற்கொலை செய்யப்போவதாவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. சிவனடியார் சரவணன் குடும்பத்தினரும் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இதனையடுத்து அந்த ஊருக்கு சென்ற இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறினர். ஆனால் சாமியாரின் ஊர் மக்கள் சாமியார் வெளியிட்ட வீடியோ பொய் எனக் கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆவேசமான அனுமன் சேனா அமைப்பின் தலைவர் ஸ்ரீதரன் ’’நான் தமிழ்நாடு முழுக்க சுற்றியவன். என்னை கண்டால் எடப்பாடி பழனிச்சாமியே சிறுநீர் கழிப்பார். அந்த அளவு செய்தவன்’’என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாக தாக்கி பேசியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!