
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமது நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. இதனால் திமுகவுக்கு காங்கிரஸ்,விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் மனிதநேய கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஓராண்டாக காலியாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பை அடுத்து தமிழகத்தின் பிரதான கட்சிகள் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசித்து வருகின்றன.
திமுக சார்பில் கடந்த முறை வேட்பாளராக களமிறங்கிய மருது கணேஷ் இந்த முறையும் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் வேட்பாளராக மருது கணேஷை அறிவித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தோழமை கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவதாக அனைத்து இந்திய பார்வார்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.கதிரவன் தெரிவித்தார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமது நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளது. இதனால் திமுகவுக்கு காங்கிரஸ்,விசிக, இந்தியன் முஸ்லீம் லீக் மனிதநேய கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதரவு தெரிவித்துள்ளது.