வந்ததும் வராததுமாக ஸ்டாலின் போட்ட உத்தரவு.. ஏரியாவில் ரவுண்டு அடிக்கும் துணை மேயர்.

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2022, 1:11 PM IST
Highlights

அதன்பேரில் சைதாப்பேட்டை அப்பாவும் நகரில் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் எழுப்பினர், இந்த நிலையில் இங்கு வந்து நேரில் ஆய்வு செய்தேன் என்ற அவர், சென்னை முழுவதும் கொசு ஒழிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம்.

சட்டத்திற்கு புறம்பாக கால்வாய்களில் கழிவுகள் கொட்டும் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை மேயர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி துணைமேயர் மகேஷ்குமார் நீர்நிலை கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான அனைத்து வசதிகளும் உடனடியாக செய்து தரவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

அதன்பேரில் சைதாப்பேட்டை அப்பாவும் நகரில் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் எழுப்பினர், இந்த நிலையில் இங்கு வந்து நேரில் ஆய்வு செய்தேன் என்ற அவர், சென்னை முழுவதும் கொசு ஒழிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொசு இல்லாத நகரமாக மாற்றுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். இந்த பணிக்காக 3463 பணியாளர்கள் பணியில் உள்ளனர், மேலும் 67 கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் உள்ளது மேலும் தேவைப்பட்டால், தேவைக்கேற்ப இயந்திரங்களும் வாங்கப்படும் என்றார். 

இரண்டு நாட்களுக்கு முன்னர் பதவி பதவியேற்றவுடன் கொசு அதிகமாக உள்ளது என புகார்கள் வந்து கொண்டிருந்தது, இதனை அடுத்து இந்த பணியை முதலில் தொடங்கப்பட்டது.எதிர்காலத்தில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சனை எதுவும் இல்லை வருங்காலத்தில் 1,2 இடங்களில் இருக்கும் அதனை செய்யப்படும். 

சென்னையில் உள்ள கால்வாய்களில் அனுமதியின்றி கழிவு நீரை வெளியேற்றும் வீடுகளுக்கு இறுதி நோட்டீஸ் கொடுக்கப்பட்டு முறையாக கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கால்வாய்களில் கழிவுகள் கொட்டும் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பின்னர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும்,  மழைநீர் தேங்கும் இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான சிறப்பு குழு அமைத்து தீர்வு காணப்படும். இதற்காக சிறப்பு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

click me!