6 மணி நேரம் போரை நிறுத்திய மோடி.. மார்தட்டும் அண்ணாமலை.. திமுகவை டாராக கிழித்து அதகளம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 7, 2022, 12:45 PM IST
Highlights

இதன் விளைவாக ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் எல்லையை ஒட்டியுள்ள நாடுகளில் முகாமிட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி உக்ரைனில் சிக்கியிருந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆறு மணி நேரம் இடைவெளி இந்திய மாணவிகளை மீட்பதற்கு பேருதவியாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்திய மாணவர்களை மீட்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யாவிடம் பேசி 6 மணி நேரம் போரை நிறுத்தினார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை ரஷ்ய அழைத்துச் சென்று அங்கிருந்து நாட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் திமுகவினர் மாணவர்களின் மீட்டு கொண்டு வருவது போல நாடகம் நடத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ரஷ்ய உக்ரைன் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் இதை போர் என இதுவரை ரஷ்யா குறிப்பிடவில்லை,  ராணுவ சிறப்பு நடவடிக்கை என்றே கூறி வருகிறது. எதிர் காலத்தில் பல அரசியல்  சிக்கல்கள் ஏற்படும் என்ற காரணங்களால் போர்  என்ற வார்த்தையை ரஷ்யா தவிர்த்து வருகிறது.  ஆனால் ரஷ்யாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் உக்ரைனை நிலைகுலைய செய்துவருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஏவுகணைத் தாக்குதல், குண்டு சப்தம் என உக்ரைன் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உக்ரைன் நகரங்களிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்தப் போர் இருநாடுகளுக்கும் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் போர் ஓய்ந்தபாடில்லை. உக்ரேனின் சரணடையும் வரை விடப்போவதில்லை என ரஷ்யா மூர்க்கத்தனமாக தாக்கி வருகிறது. என்ன நடந்தாலும் பரவாயில்லை முடிந்தவரை பார்க்கிறோம் என உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி முரண்டு பிடித்து வருகிறார். இதனால் நாளுக்குநாள் போர் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யா நினைத்தால் ஒரே நாளில் உக்ரைனை கைப்பற்ற முடியும் ஆனால் நோக்கம் அது அல்ல, உக்ரேனை தங்கள் வழிக்கு கொண்டு வர வேண்டும் என்பதே ஆகும்.   அதனால் தான் கொஞ்சம் கொஞ்சமாக உக்ரைனே சிதைத்து வருகிறார் புடின்.

பல முறை உக்ரேன் சரணடைய வேண்டும் என  புடின் வலியுறுத்தியும் சரணடையாமல் எதிர்த்துப் போராடி வருகிறார் ஜலன்ஸ்கி, அவரின் இந்த பிடிவாதம்தான் மேலும் மேலும் ரஷ்யாவை வெறுப்படையச் செய்துவருகிறது. இது ஒருபுறமிருக்க உக்ரைனில் தங்கி படித்து வந்த பல்வேறு வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், போர்க்களத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர். பல நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை மீட்க போராடி வரும் நிலையில், இந்தியா மீட்பு பணியை துரிதப்படுத்தி மாணவர்களையும் பொது மக்களை மீட்டு வருகிறது. 

ஆனால் தொடர்போர் காரணமாக மீட்பு பணி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், மாணவர்களுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. இதுவரை எத்தனையோ நாடுகள்  சொல்லியும் கேட்காத ரஷ்ய அதிபர் புடின் இந்திய பிரதமர் மோடியின் பேச்சுக்கு மரியாதை தரும் வகையில் நடந்து வருகிறார். இந்தியா ரஷ்யாவின் நட்பு நாடு, நீண்ட நாளைய நண்பன் என்பதுடன், இந்தப் போரை காரணம் காட்டி ரஷ்யாவுக்கு எதிராக ஐநா கொண்டுவந்த தீர்மானத்தில் ரஷ்யாவை எதிர்த்து வாக்களிக்காமல் இந்தியா விலகி நின்றதே புடினின் மரியாதைக்கு முக்கிய காரணம் ஆகும். இதனால்தான் இந்திய பிரதமர் மோடி சொன்னால் புடின் கேட்டுக்கொள்வார், எனவே பிரதமர் மோடி போரை நிறுத்தும்படி புடினிடம் பேச வேண்டும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது உக்ரேன்.

சர்வதேச அளவில் எத்தனையோ தலைவர்கள் இருந்தோம் இந்தியாவின் பிரதமர் மோடி நினைத்தால் போரை நிறுத்த முடியும் என உக்ரேன் வலுவாக நம்புகிறது. எனவே பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென உக்ரைன் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில்தான் உக்ரேனில் தங்கி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்பதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. எனவே பிரதமர் மோடி நேரடியாக ரஷ்ய அதிபர் புடினிடம், உக்ரேனில் சிக்கியுள்ள இந்திய மாணவிகளை மீட்பதற்கு ரஷ்யா உதவி செய்ய வேண்டும் என வைத்த கோரிக்கையின் அடிப்படையில், உடனே அதை ஏற்றுக்கொண்ட ரஷ்ய அதிபர், இந்திய மாணவர்களை மீட்க ரஷ்யா உறுதுணையாக இருக்கும் என உறுதி அளித்ததுடன், போரை 6 மணி நேரம் நிறுத்தி வைப்பதாகவும்  அறிவித்தார்.

இந்திய பிரதமர் மோடி வைத்த ஒற்றை கோரிக்கைக்காக போரை ரஷ்ய அதிபர் 6 மணி நேரம் நிறுத்துவதாக அறிவித்தது சர்வதேச அளவில் அதிக முக்கியத்துவம் பெற்றது. சர்வதேச அளவில் மோடிக்கு உள்ள செல்வாக்கையும் அது காட்டியுள்ளது. தீவிரமாக நடந்து கொண்டிர்க்கும் போரை திடீரென ஒரு நாடு நிறுத்துவது  சாமானியமான காரியமல்ல, இதனால் ரஷ்யாவுக்கு ராணுவ ரீதியாகவும், போர் வியூகத்திலும் அது பெரும் பின்னடைவை  ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. 6 மணி நேர இடைவெளியில் எதிரி நாட்டுப் படைகள் சுதாரித்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.  இது அனைத்தும் ரஷ்யாவுக்கு நன்கு தெரியும், ஆனாலும் தன் நண்பனுக்காக,  நம்பிக்கை மிகுந்த கூட்டாளிக்காக இந்த துணிச்சலான முடிவை ரஷ்யா எடுத்தது. 

இதன் விளைவாக ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் எல்லையை ஒட்டியுள்ள நாடுகளில் முகாமிட்டிருந்த நிலையில் திட்டமிட்டபடி உக்ரைனில் சிக்கியிருந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆறு மணி நேரம் இடைவெளி இந்திய மாணவிகளை மீட்பதற்கு பேருதவியாக அமைந்துள்ளது 

என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதன் விளைவாகத்தான் கடந்த சில தினங்களாக மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. மோடியின் இந்த அதிரடி நடவடிக்கை சர்வதேச அளவில் அவருக்குள்ள செல்வாக்கை  பறைசாற்றி இருப்பதுடன், சர்வதேச அளவில் மோடிக்கு உள்ள நன்மதிப்பையும் உயர்த்தியுள்ளது. இதை தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மேற்கோள்காட்டி திருப்பூரில் நிகழ்ந்த காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 

உள்ளாட்சித் தேர்தலை காட்டிலும் வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றிபெறும் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்டு வருவதில் திமுக பொய்யான அரசியல் செய்து வருகிறது என தெரிவித்துள்ள அவர், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு முழுவீச்சில் மாணவர்களை மீட்டு வருகிறது என்றும்,  ரஷ்ய அதிபருடன் பேசி 6 மணி நேரம் போரையே நிறுத்தியவர் மோடி என்றும், அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.  
 

click me!