
ஓகி புயல் பாதிப்பு குறித்து தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
ஓகி புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது. இதில் கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் கனமழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பெரும்பால இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் குடியிருப்புகளிலும் விவசாய நிலங்களிலும் நீர் பாய்ந்து சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
அப்போது ஓகி புயல் பாதிப்பு குறித்து தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாகவும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
புயல் பாதிப்பு குறித்த விரிவான அறிக்கையை அளிக்கிறோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை நாளைக்குள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.