ஆளப்போறார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்: சர்வே சொல்லும் ரகசியம்..!

 
Published : Dec 01, 2017, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
ஆளப்போறார் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்: சர்வே சொல்லும் ரகசியம்..!

சுருக்கம்

kamal will rule tamilnadu in the result of survey

தைப் பொங்கல் வந்துவிட்டால் ஊரெல்லாம் மியூசிக்கல் சேர் விளையாட்டு நடக்கும். பாட்டு ஒலிக்க, நடுவில் சில நாற்காலிகளை போட்டு போட்டியாளர்கள் சுற்றிச் சுற்றி வருவார்கள். பாட்டு நின்றதும், அடித்துப்பிடித்து சேரில் உட்காருபவர்கள் போட்டியில் தொடர்வார்கள், உட்கார முடியாதவர்கள் வெளியேறுவார்கள். ஆட்கள் குறைய குறைய சேர்களின் எண்ணிக்கையும் குறைந்து ஒரு கட்டத்தில் ஒரு நாற்காலிக்கு இரண்டு மூன்று பேர் போட்டியிட்டு கடைசியில் ஒருவர் வெல்வார். 

கிட்டத்தட்ட இப்படித்தான் அரசியலால் செய்யப்பட்ட முதல்வர் நாற்காலிக்கு கமல், ரஜினி மற்றும் விஜய் ஆகிய மூன்று மாஸ் நடிகர்களும் போட்டி போட துவங்கியுள்ளனர். இதில் யாருக்கு மாஸ்? யார் வெல்ல வாய்ப்பு அதிகம்? எனும் கேள்விகளுடன் சர்வே ஒன்று தனியார் நிறுவனங்களால் நடத்தப்பட்டிருக்கிறது. அதன் தெறி ரிசல்ட் இதோ...

*    தனிக்கட்சி தொடங்கினால் யாருக்கு வெற்றி வாய்ப்பு?
கமல் - 42.4%,   ரஜினி -  32.8%,    விஜய் - 24.6%

*    கட்சி துவங்கும் நடிகர்கள் தற்போதைய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் ஏற்பீர்களா?
நடிகர்களின் தனிக்கட்சிக்கு மட்டுமே ஆதரவு - 38.9%
கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு - 13.1%
எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை பொறுத்து - 48.0%

*    ரசிகர்களின் ஆதரவை, பலத்தை வாக்கு வங்கியாக மாற்றும் சக்தியுள்ளவர் எந்த நடிகர்?
ரஜினி - 29.8%,   கமல் - 25.0%,    விஜய் - 20.6%

*    தமிழக அரசியலில் அடுத்த எம்.ஜி.ஆர். யார்?
கமல் - 15.9%,   ரஜினி - 14.3%,   விஜய் 12.4% 
இவர்கள் மூவருமே இல்லை - 56.6%

*    மூவரில் கட்சி துவங்கினால் உங்கள் வாக்கு யாருக்கு?
கமல் - 31.8%,    ரஜினி - 18.0%, விஜய் - 18.9%

*    இவர்கள் மக்களுக்காக உழைப்பவர்களா? எதை வைத்து நம்புகிறீர்கள்?
ஒரு மாற்றத்திற்காக - 41.2%,  நம்பவே இல்லை - 24.6%, மக்கள் பணிகளால் - 21.9%

- என்று வந்திருக்கிறது சர்வேயின் ரிசல்ட். 

ஒட்டு மொத்தத்தில் பார்க்கும்போது இந்த கருத்துக்கணிப்பின் மூலம் நடிகர்களுக்கு அரசியலில் பெரிய எதிர்காலம் இல்லை என்பது தெரிந்தாலும் கூட நல்ல சிந்தனையுடன் கட்சி துவங்கி, உண்மைத்தன்மையுடன் உழைத்து, மக்களின் அபிமானத்தை பெற்றால் நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் கமலுக்கே அதிகம் குவியும் என்று உறுதியாக தெரிகிறது. 

இந்த சர்வேயின் ரிசல்ட் தங்கள் தலைவர் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தை காட்டுவதாகவும், இதன் மூலம் அரசியலுக்கு வந்து ஆழ்வார்பேட்டை ஆண்டவரே தமிழகத்தை ஆளப்போறார்! என்றும் குதித்துக் கூத்தாடுகின்றனர் கமலின் ரசிகர்கள். 
ரஜினி ரசிகர்கள் மிகவும் அப்செட் ஆகும்படியும், விஜய்யின் ரசிகர்கள் அதிர்ச்சி பாதியும் அலர்ட் மீதியுமாய் உணர்கிறார்களாம். 
 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!