
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டம் ஒன்றில் பேசும்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தாங்கள் அவரை சந்திக்கவில்லை என்றும் பொய் கூறியதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில்,
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை வெளிக்கொணர வேண்டிய மிக முக்கிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதாக அதில் கூறியுள்ளார்.
அவரது மரணம் தொடர்பாக அமைச்சர்கள் பேசியதை மறைக்க திமுக மீது விமர்சனங்கள் தொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அமைக்கும் விசாரணைக் கமிஷன் மூலம் ஜெ. மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிவராது என்றும் மர்மத்தை மறைக்கவே முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள் முற்படுவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.