அதிமுக பொதுக்குழு செல்லுமா..? ஓ.பன்னீர் செல்வமா.? எடப்பாடியா..? உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய முடிவு.?

By Ajmal KhanFirst Published Jan 4, 2023, 9:18 AM IST
Highlights

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணையில் நீதிமன்றம் முக்கிய நிலைப்பாடு எடுக்கும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளர்

அதிமுக அதிகார மோதல்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்கள் கடந்த 5ஆண்டுகளாக முடிவடையாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதிலும் ஆட்சி அதிகாரத்தை இழந்த அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  வானகரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். இந்தக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்,  இந்த வழக்கில் முதலில் பொதுக்குழு செல்லாது எனவும், அதன் பின்னர் செல்லும் என இரு வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான வாதங்கள் ஏற்கனவே நடைபெற்றன.

AIADMK : 4ம் தேதி வரும் ரிசல்ட்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.! அதிமுக தலைமை இவருதான் - பரபரக்கும் அதிமுக வட்டாரம்

உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டது.  அடுத்த விசாரணை வரும் வரை, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த இபிஎஸ் தரப்பு அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் எனவும் உத்தரவாதம் அளித்தது மேலும்  அதிமுக தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகள் மீது தேர்தல் ஆணையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப்பணிகளை சீராகச் செய்யமுடியவில்லை, எனவே தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதிர்ச்சி அளிக்குமா நீதிமன்றம்.?

இதனிடையே அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. எனவே இந்த விசாரணையின் போது ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் நீதிபதிகள் ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுமா..? அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை.?

click me!