தமிழக ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ள முக்கிய திட்டங்கள் தொடர்பாக முடிவு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை
தமிழக சட்டப்பேரவை கூட்டமானது, ஒவ்வொரு ஆண்டும் தமிழக ஆளுநர் உரையுடன் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும், அப்போது தமிழக அரசின் திட்டங்களின் தொகுப்புகளை உரையாக நிகழ்த்துவார். இதுவரை தமிழக அரசு மேற்கொண்ட திட்டங்களின் நிலை குறித்தும் புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் அறிவிப்பார். இந்தநிலைநில் வருகிற 9 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவியின் உரையானது நிகழ்த்த உள்ளார். இந்த உரையில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை
முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், ஆளுநர் உரையில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்டவுள்ளது. குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு அதற்கான அறவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது. மேலும் தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது, நீர் மேலாண்மை திட்டம் தொடர்பாகவும், மாதம் ஒரு முறை மின் கட்டணம் தொடர்பான அறிவிப்பு தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்