ஆடேய் பாகிஸ்தான்காரா எவ்வளவு அடிச்சாலும் திருந்த மாட்டியாடா.?? 3 கிலோ வெடி குண்டு.. வெடிச்சிருந்தா என்ன கதி.!

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2022, 10:44 AM IST
Highlights

தலைநகரில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து நாட்டின் பாதுகாப்பு அமைப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்பு குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் அட்டாரி வாகா எல்லைக்கு அருகே 5 கிலோ எடையுள்ள வெடிபொருள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது டெல்லியில் உள்ள  காஜிப்பூர் மலர்  சந்தையில் 3 கிலோ எடையுள்ள வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வெடிகுண்டு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குடியரசு தின விழா அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக வைக்கப்பட்ட சதி செயல் இது என்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் என்ற நாடு தற்போது திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. வேலைவாய்ப்பு, வறுமை, பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஆனாலும் அந்நாடு அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தை பரப்புவதில் ஒரு போதும் சமரசம் இன்றி செயல்பட்டு வருகிறது என டெல்லி காவல்துறையின் உளவுத்துறை அறிக்கை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. தற்போது அது உண்மை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள காஜிப்பூர் மலர் சந்தையில் அதி பயங்கர வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. அது பாகிஸ்தானில் இருந்து தயாரிக்கப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வெடிகுண்டு தரை வழியாகவோ அல்லது கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை அறிக்கையில் IED அமோனியம் நைட்ரேட், ஆர்டிஎக்ஸ், 9 வோல்ட் பேட்டரி மற்றும் சிறிய இரும்பு துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு படையினர் சுமார் 3 கிலோ வெடிபொருட்களை அழித்துவிட்டு மீதமுள்ளவற்றை ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள  தேசிய வெடிகுண்டு தரவு மையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த வெடிபொருட்கள் கடல் மார்க்கமாகவோ, தரை வழியாகவோ கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் வெடிபொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் பொறுப்பு ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்ட ஐஇடி வெடிக்க 1 மணி நேரம் 8 நிமிடங்களுக்கு டைமர்  செட் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சர்க்யூட் தவறு காரணமாக அது வெடிக்கவில்லை, நாட்டில் இனவாத பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் இந்த சதி செய்யப்பட்டு இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபிலிருந்து இதே போன்ற வெடி பொருட்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் குடியரசு தின கொண்டாட்டங்களை குறிவைத்து இந்த சதி திட்டம் செய்யப்பட்டிருக்கிறது என்றும், தலைநகரில் உள்ள பாதுகாப்பு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர் போதைப் பொருள் கடத்தல் காரர்களின் மூலம் ஐஇடிகள், மற்றும் சரக்குகள் தொடர்ந்து இந்தியாவுக்கு அனுப்பப்படுகின்றன. நாட்டில் இனவாதத்தை பரப்புவதே அவர்களின் உண்மையான நோக்கம். உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களில் மிகப்பெரிய பயங்கரவாத சம்பவத்தை நடத்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். 5 மாநில தேர்தல் மற்றும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்த சதி திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தலைநகரில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து நாட்டின் பாதுகாப்பு அமைப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்பு குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவித்து வந்தாலும், இந்தியாவுக்கு எதிரான சதி வேலைகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. பலமுறை பாகிஸ்தானை இந்தியா எச்சரித்தும், எல்லையில் தகுந்த பதிலடிகொடுத்தும் பாகிஸ்தான் தன்னுடைய அயோக்கியத்தனத்தை நிறுத்திக் கொள்ளவில்லை என்பதே இதன் மூலம் தெரியவந்துள்ளது. 
 

click me!