Urban Local Election: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. இந்த தேதியில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறதாம்..!

By vinoth kumarFirst Published Jan 18, 2022, 8:25 AM IST
Highlights

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, 2019ம் ஆண்டில் நடைபெற்றது. இதனையடுத்து, நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு புதியதாக பிரிக்கப்பட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில்  சமீபத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 

வரும் 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து இருப்பதால் 21ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, 2019ம் ஆண்டில் நடைபெற்றது. இதனையடுத்து, நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு புதியதாக பிரிக்கப்பட்ட நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில்  சமீபத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், வார்டு மறுவரையறை செய்யும் பணிகளும் முடிந்துவிட்டன.  மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது. இந்நிலையில், விரைவில் நகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வரும் 19ம் தேதி, அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் முடிந்த பின், வரும் 27ம் தேதிக்குள் எந்த நாளிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. வரும் 27ம் தேதிக்குள் தேர்தலை நடத்த இயலாவிட்டாலும், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். இல்லாவிடில், மாநில தேர்தல் ஆணையம் கடும் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கும். பிப்ரவரி மூன்றாவது வாரத்துக்குள் தேர்தலை நடத்தும் வகையில், 21ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

click me!