BIG Breaking: ரஜினிக்கு மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு சரி செய்யப்பட்டது. விரைவில் வீடு திரும்புவார்.

By Ezhilarasan BabuFirst Published Oct 29, 2021, 3:00 PM IST
Highlights

மேலும் இன்பார்க்ட் எனப்படும் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போகும் பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு தேவையான அனைத்துவிதமான சிகிச்சைகளும் மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும், ரஜினிகாந்த் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் இருந்து அடைப்பு சரி செய்யப்பட்டது என்றும் காவிரி மருத்துமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப்பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  தலைசுற்றல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும்  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்டுள்ள ரத்தநாள பிரச்சனைகளை சரி செய்ய மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவருக்கு தேவையான அனைத்து வித சிகிச்சைகளையும் வழங்கி வருவதாக தகவல் வெளியானது, இந்நிலையில் பிற்பகல், இரண்டு பேரக்குழந்தைகளுடன் மருத்தவமனைக்கு வந்த லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்: பசும்பொன் செல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி இல்லை..? உளவுத் துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

அண்ணாத்த திரைப்படத்திற்காக தொடர் படப்பிடிப்பு மற்றும் டெல்லி சென்று தாதா சாகிப் பால்கே விருது பெற்று சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தனது பேரனுடன் அண்ணாத்த திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்ததாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் திடீரென அவருக்கு காய்ச்சல் மற்றும் அதீத தலைவலி ஏற்பட்ட நிலையில் வழக்கமான மருத்துவ குழுவினர்  போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று முதற்கட்ட சிகிச்சையை நேற்று மாலை 3 மணி அளவில் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் முதற்கட்ட சிகிச்சையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படாத நிலையில் உடனடியாக மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்குமாறு குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி நேற்று மாலை 4.30 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருதவியல் மற்றும் மூளை நரம்பியல் துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் மூளையில் ரத்த நாளத்தில் திசை சிதைவு இருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ உலகில் நெக்ரோஸிஸ் என்றழைக்கப்படும் இந்த பாதிப்பால் ரத்த குழாயில் அடைப்பு, ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்தகுழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். 

இதையும் படியுங்கள்: கல்வியைக் காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டத்துக்குத் துணைபோகும் ஸ்டாலின்.. கோமாளி என விமர்சித்த சீமான்.

மேலும் இன்பார்க்ட் எனப்படும் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போகும் பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு தேவையான அனைத்துவிதமான சிகிச்சைகளும் மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டு வருகிறது.தற்போதைய சூழலில் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்டுள்ள ரத்தநாள பிரச்சனைகளை சரி செய்ய மருத்துவ குழுவினர் தொடர்ந்து அவருக்கு தேவையான அனைத்து வித சிகிச்சைகளையும் வழங்கி வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில், நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும், ரஜினிகாந்த் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் இருந்து அடைப்பு சரி செய்யப்பட்டது என்றும், மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்குப்பின் ரஜினிகாந்த் உடல் நலம் தேறி வருகிறார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.  தலைசுற்றல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும்  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!