ரொம்ப ஆடுனா வாலை நறுக்கி சுண்ணாம்பு வச்சுடுவோம்.. அண்ணாமலையை ஒருமையில் எச்சரித்த சீனியர் அமைச்சர்.

Published : Jun 07, 2022, 01:16 PM IST
 ரொம்ப ஆடுனா வாலை நறுக்கி சுண்ணாம்பு வச்சுடுவோம்.. அண்ணாமலையை ஒருமையில் எச்சரித்த சீனியர் அமைச்சர்.

சுருக்கம்

பாஜகவினர் ஓவரா ஆட்டம் போட்டால் வாலை ஒட்ட நறுக்கி சுண்ணாம்பு வைத்து விடுவோம் என அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆவேசம் தெரிவித்துள்ளார். பாஜக தன்னுடைய வேலையை வேறு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும், இது தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார் .  

பாஜகவினர் ஓவரா ஆட்டம் போட்டால் வாலை ஒட்ட நறுக்கி சுண்ணாம்பு வைத்து விடுவோம் என அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆவேசம் தெரிவித்துள்ளார். பாஜக தன்னுடைய வேலையை வேறு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும், இது தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் சில திட்டங்கள் விமர்சிக்கப்பட்டு வருகிறது, ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவர் மீதும் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார், அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மாநில உரிமைகளை முன் வைக்கிறோம் என்ற பெயரில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கணக்குப்பிள்ளை கணக்கு கேட்பது போல ஸ்டாலின் நடந்து கொண்டுள்ளார்,

ஒரு பிரதமரின் மேடையில் முதல்வர் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு  தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கைகளே சான்று என அண்ணாமலை விமர்சித்துள்ளார்கள். முதலமைச்சரின் பேச்சை எண்ணி வெட்கப்படுகிறோம் என்றும் அவர் முதல்வரை தாக்கிப் பேசியுள்ளார். இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். அண்ணாமலை விளம்பரத்திற்காக தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து இப்படி பேசி வருவதாகவும் அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர் . மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தா.மோ அன்பரசன், தமிழக பாஜக மற்றும் அதன் மாநில தலைவர் அண்ணாமலையை மிகக்கடுமையாக ஒருமையில் விமர்சித்துள்ளார். அவர் பேசிய பேச்சு பின்வருமாறு:-

பிரதமர் மோடி கலந்து கொண்ட மேடையில் தமிழக முதலமைச்சர் பேசியது தவறு என பாஜக அண்ணாமலை கூறிவருகிறார். கடந்த 2 மாதத்திற்கு முன்பாகவே பிரதமர் மோடியை முறையாக சந்தித்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பிரதமர் மோடி அவர்களே நீட் தேர்வை ரத்து செய்யுங்கள் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிதி பாக்கி இருக்கிறது, அதை விடுவியுங்கள் என கோரிக்கை வைத்தார். அது விடுவிக்கப்படவில்லை அதனால்தான் அவர் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். பிரதமரிடம் கோரிக்கை வைக்காமல் நாங்கள் யாரிடம் கோரிக்கை வைப்பது அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை வைக்க முடியும், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிதி நிலுவையில் இருக்கிறது. முடிந்தால் அண்ணாமலை அந்த நிதியை வாங்கிக் கொடுக்க முயற்சிக்க வேண்டும். கச்சத்தீவை நீக்குவதற்கு இதுவே சரியான நேரம், முடிந்தால் அண்ணாமலை அதற்காக மோடியிடம் பேசட்டும்.

ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை விட்டுவிட்டு தொடர்ந்து திமுகவினரை விமர்சிப்பது அண்ணாமலையில் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து திமுகவை விமர்சித்துப் பேசினால் இனி நாங்கள் பேச மாட்டோம் எங்களது அடிமட்ட தொண்டர்கள் பேசுவார்கள், நீங்கள் சகிக்க மாட்டீர்கள். தேர்தலின் போது மோடி என்ன கூறினார், எல்லோருடைய வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவோம் என்று கூறினார், அதை செய்தாரா மோடி? வந்தால் ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றார், இதுவரை 16 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும் கொடுத்தாரா? இதோ பக்கத்தில் இருக்கிற அனல்மின் நிலையத்தில் ஒரு தமிழனுக்கு கூட வேலை இல்லை, டெல்லியிலிருந்து வந்தவர்கள் இந்தி பேசும் வடமாநிலத்தை சேர்ந்தவர்களே அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் மோடியிடம் சொல்லி மேகதாது அணை பிரச்சனையை நிறுத்துங்கள். அதிமுக காரர்கள் ஊழல் செய்ததனால் தங்கள் மீது வழக்குப் போட்டு விடக்கூடாது என்பதற்காக அமைதியாக இருக்கிறார்கள்.

இதை பயன்படுத்தி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்படியாவது பாஜகவை எதிர்க்கட்சியாக்கிகிவிடலாம் என முயற்சிக்கிறார் நான் சொல்கிறேன் இந்த வேலையை பாஜக வேறு எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும் தமிழ்நாட்டில் அது எடுபடாது. இனி கோவில்களில் கூட உங்களை நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை எல்லா கோயில்களிலும் நாங்களே அனைத்தையும் செய்யப்போகிறோம், கூழ் ஊற்றுவது முதல் கும்பாபிஷேகம் செய்வது வரை நீங்களே செய்வோம், தன்னை எல்லோரும் மெச்சிக் கொள்ள வேண்டும், ஊருக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காக  பேசிக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் அது எடுபடாது. அளவுக்கு மீறி ஆட்டம் போட்டால் வாலை ஓட்ட நறுக்கி சுண்ணாம்பு வைத்துவிடுவோம். இவ்வாறு அவர் அண்ணாமலையை ஒருமையில் சரமாரியாக தாக்கி பேசியுள்ளார். இது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி