ஒருமையில் பேசும் பொறுக்கிகளை நொறுக்கியவர் தான் அண்ணாமலை.. மரியாதை பேசுங்க அமைச்சரே.. எச்சரிக்கும் BJP.!

By vinoth kumarFirst Published Jun 7, 2022, 10:42 AM IST
Highlights

 தமிழக அமைச்சர் அன்பரசன்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களையும்  ஒருமையில் பேசியுள்ளதோடு, 'வாடா போடா' என்றும், பொறுக்கி என்றும், அதிகம் பேசினால் அவரை 'ஒழித்து கட்டுவேன்' என்று கொலை மிரட்டல் விடுத்திருப்பதும், தன் கட்சி தொண்டர்களிடம் விட்டால் 'நாறி போய் விடும் ஜாக்கிரதை.

தமிழக அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார் என  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழக அமைச்சர் அன்பரசன்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களையும்  ஒருமையில் பேசியுள்ளதோடு, 'வாடா போடா' என்றும், பொறுக்கி என்றும், அதிகம் பேசினால் அவரை 'ஒழித்து கட்டுவேன்' என்று கொலை மிரட்டல் விடுத்திருப்பதும், தன் கட்சி தொண்டர்களிடம் விட்டால் 'நாறி போய் விடும் ஜாக்கிரதை' என்றும் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஒருமையில் பேசவும், 'வாடா போடா' என்றும், 'பொறுக்கி' என்றும் ரௌடிகளை போல் பாஜகவினருக்கும் பேச தெரியும். ஆனால் பேசமாட்டார்கள். ஆனால் அப்படி பேசும் பொறுக்கிகளை நொறுக்கி தள்ளிய போலீஸ் தான் அண்ணாமலை என்பதை அன்பரசன் 'மரியாதையாக' புரிந்து கொள்வது நல்லது. "ஒரு வாரம் தூக்கி உள்ளே வைத்தால் கட்சியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று போய் விடுவான் என்றும் நாங்கள் எல்லாம் அப்படி இல்லை. ஜெயிலுக்கு பெட்டியை தூக்கி கொண்டு கிளம்பி விடுவோம்" என்றும் அன்பரசன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 

"அய்யய்யோ கொல்றாங்களே, அய்யய்யோ கொல்றாங்களே" என்ற வீர வசனத்தை பேசியது யார் என திமுகவினர் மறந்து விட வேண்டாம். தமிழக அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசி பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விட்ட அந்த நபரை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். பிரதமர் குறித்து அவதூறாக பேசியதற்காகவும், அண்ணாமலை அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த காரணத்திற்காகவும் ரௌடித்தனமாக பேசிய அமைச்சர் அன்பரசனை கைது செய்து உரிய தண்டனை பெற்று தர வேண்டியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறையின்  பொறுப்பு மற்றும் கடமை. 

தமிழக காவல் துறை இது போன்ற கொலை மிரட்டல்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கக்கூடாது. இதை வேண்டுகோளாக எடுத்துக்கொண்டாலும் அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டாலும் உடனடி நடவடிக்கை தேவை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

click me!