ஒரே ஒரு நாள் ஊழல் இல்லாத ஆட்சி நடத்த முடியுமா? ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு -ஸ்டாலினை சீண்டும் அண்ணாமலை

Published : Jun 07, 2022, 09:22 AM IST
ஒரே ஒரு நாள் ஊழல் இல்லாத ஆட்சி நடத்த முடியுமா? ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு -ஸ்டாலினை  சீண்டும் அண்ணாமலை

சுருக்கம்

தமிழகத்தில் ஒரே  ஒருநாள் ஊழல் இல்லாத ஆட்சியை திமுக அரசால் வழங்க முடியுமா? என சிவகங்கையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக- பாஜக மோதல்

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ளநிலையில், திமுக ஆட்சி மீது பல்வேறு புகார்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார். முதலமைச்சர் துபாய் பயணத்தை விமர்சித்த அண்ணாமலை, மின் வாரியத்தில் முறைகேடு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வாங்குவதில் முறைகேடு, ஜி ஸ்கொயர் கட்டமான நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசின் செய்லபாடு என  என பல குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறார். தமிழக ஆளுநரிடம் ஏற்கனவே மின் வாரிய முறைகேடு தொடர்பாக பாஜகவினர் புகார் அளித்திருந்த நிலையில் வருகிற 20 ஆம் தேதி அமைச்சர்கள் மீதான புகார் புத்தகத்தை ஆளுநரிடம் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக அரசு ஸ்டிக்கர் அரசு

இந்தநிலையில் சிவகங்கை  மாவட்ட பா.ஜ.க சார்பில் பா.ஜ.க ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் அதன் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நையினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றதுடன் ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்  பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,  மத்திய அரசு ரூ42 க்கு அரிசி வழங்குகிறது ஆனால் ரூ2 ஐ கொடுத்துவிட்டு கலைஞரின் ஸ்டிக்கரை ஒட்டி மாநில அரசு வழங்கி வருவதுடன் ஏழை பங்காளனாக திமுக அரசு கபட நாடகமாடிவருகிறது என்றும் திமுக அரசு கடந்த ஒரு ஆண்டுகளாக ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக மட்டுமே மாறியுள்ளது என விமர்சித்தார். ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்களில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளதாகவும் அந்த ஊழலில் சம்பந்தப்படாத அமைச்சர்களே இல்லை என தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சிறிய தவறு நடந்துவிட்டதாகவும் அந்த பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் அனைத்தும் கருப்பு பட்டியலில் வைக்கப்படுவதாக தெரிவித்தார். 

ஒரே ஒரு நாள் ஊழல் இல்லாத ஆட்சி

ஆனால் ஒரு நிறுவனங்கள் கூட கருப்பு பட்டியலில் வைக்கவில்லை ஏன் என்றால் அவை அனைத்தும் கோபாலபுரத்தில் உள்ளவை என்றும் தெரிவித்த அவர், கர்ப்பிணி பெண்களுக்கு   ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் அம்மா பெட்டகம் என ஒன்றை அறிவித்து அதில் 8 பொருட்களில் ஒன்றாக ஊட்டச்சத்து மாவு வழஙகப்பட்டு வருகிறது. அந்த ஊட்டச்சத்து மாவை பொங்கல் தொகுப்பு வழங்கிய அதே நிறுவனம்தான் கடந்த ஆண்டு 24 லட்சம் தாய்மார்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.   பொங்கல் தொகுப்பே தரமில்லாமல் வழங்கப்பட்ட நிலையில் அதே நிறுவனம் இந்த ஊட்டச்சத்து மாவை வழங்கினால் தாயும் குழந்தையும் எவ்வாறு நலமாக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். ஒரே, ஒரு நாள் ஊழல் இல்லாத அரசை தமிழகத்தில் நடத்தி காட்டுங்கள்  என தமிழக முதல்வருக்கு சவால் விடுப்பதாகவும் பேசினார். அது முடியாது என்றும் ஏன் என்றால் அந்த லஞ்சத்திற்கு ஊன்றுகோளாக இருப்பதே இந்த திமுக அரசுதான் என்றும் பேசினார். மேலும் இதே நேரத்தில் நமது மோடி செய்த சாதனைகளை நினைவுகூறுங்கள் என்றும் தெரிவித்த அவர் இந்த மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கான நலத்திட்டத்தில் பங்கேற்று செய்திகளில் வருவதை காட்டிலும் தினமும் முறைகேடு வழக்குகளுக்காக செய்திகளில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் எனவும் விமர்சித்து பேசினார்.

இதையும் படியுங்கள்

விஜயை வைத்து மீண்டும் சீமானை வம்புக்கிழுக்கும் விஜயலட்சுமி! பகீர் கிளப்பும் புது வீடியோ

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!