பெட்ரோல் விலை உயர்வு..! ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? பாஜகவினரை அலறவிட்ட டி.ஆர்.பாலு

By Ajmal KhanFirst Published Jun 7, 2022, 10:51 AM IST
Highlights

பெட்ரோல் டீசல் விலை குறைக்காத தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜகவினர் தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக ஒரே மேடையில் விவாதிக்க பாஜக அமைச்சர் தயாரா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
 

பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தல்

திமுக அரசிற்கும்- பாஜகவிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பிலும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் மீதான வரிகள் குறைக்கப்படவில்லை. அதனால், அந்த மாநிலங்கள் விலை உயர்வால் ஏற்படும் சிரமங்களைச் சந்திக்கின்றன. அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பது, அந்த மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. என பிதரமர் மோடி விமர்சித்திருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ,மத்திய அரசின் விலை குறைப்பு  நடவடிக்கைக்கு முன்பாகவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பெட்ரோல் மீதான வாட் வரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு குறைத்ததாக தெரிவித்துள்ளார். அந்தக் குறைப்பின் மூலம் தமிழக மக்களுக்கு லிட்டருக்கு ரூ.3 குறைவாக நிவாரணம் கிடைத்தது. இதனால் மாநில அரசுக்கு ரூ.1,160 கோடி இழப்பு ஏற்படும் நிலை உருவானதாகவும் தெரிவித்திருந்தார்.

Latest Videos

தமிழக அரசு விலையை குறைக்கவில்லை

இதனையடுத்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்த நிலையில் தமிழக அரசு வரியை குறைக்க கோரி தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 72 மணி நேர கெடு விதித்திருந்தார். இதன் படி கடந்த வாரம் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போரட்டம் நடத்தினர். அப்போது பேசிய அண்ணாமலை,  2 முறை பிரதமர் மோடி பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளார்.. அதிலும் வெறும் 6 மாதத்தில் 17 ரூபாய் விலை குறைத்து காண்பித்திருக்கிறார்.. ஆனால், தமிழக அரசு, பெட்ரோல் டீசல் விலையை இன்னமும் குறைக்கவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுப்பினால், யார் தேர்தல் அறிக்கை எழுதினார்களோ, அங்கே போய் கேளுங்கள் என்கிறார் ஆர்.எஸ்.பாரதி, எனவே அவர் சொன்னதை நாங்கள் ஏற்கிறோம். அந்த தேர்தல் அறிக்கை எழுதின டிஆர் பாலுவை முதல்வராக ஆக்குங்கள் என்று நாங்கள் வலியுறுத்தவதாக கூறினார்.

ஒரே மேடையில் விவாதம்

இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புத்தூரில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, பெட்ரோல் டீசல் விலை தொடர்பாக விவாதிக்க பாஜக தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 8 ஆண்டுகளில் 26 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் மத்திய அரசிற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலில் 56 பைசா தான் வரி வருவாய் கிடைக்கிறது. மீதமுள்ள வரி வருவாய் அனைத்தும் மத்திய அரசுக்கு தான் செல்கிறது என கூறினார்.  எனவே மத்திய அரசுக்கு செல்கின்ற வரியை  குறைத்தாலே விலையும் குறையும் என கூறினார். எனவே திமுக எம்பியையும், பாஜக அமைச்சர்களையும்  ஒரே மேடையில் ஏற்றி பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க தயாரா ? என சவால் விடுத்தார். அப்பொழுதுதான் மக்களுக்கு உண்மையான விவரம் சென்றடையும் என டி.ஆர்.பாலு கூறினார்.

இதையும் படியுங்கள்

ஒரே ஒரு நாள் ஊழல் இல்லாத ஆட்சி நடத்த முடியுமா? ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு -ஸ்டாலினை சீண்டும் அண்ணாமலை

click me!