மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் முதல்வர்.! தமிழக மின்வாரியத்தில் வட மாநிலத்தவர்களுக்கு வேலையா..? பாஜக கேள்வி

By Ajmal KhanFirst Published Jan 11, 2023, 9:22 AM IST
Highlights

தமிழக மின் வாரியத்தில் தனியார்ஒப்பந்ததாரர்கள் அதிகளவில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதும்,  அதிலும் வட  மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுவது ஏன்? என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
 

வட மாநிலத்தவர்களுக்கு பணி

மத்திய அரசு தேர்வில் தமிழர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், வட மாநிலத்தவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் தமிழக மின் வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் மாநிலங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 துணை மின் பொறியாளர் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது. அதில் ஆந்திரா, கேரளா, மகாராட்டிரா உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் 38 பேர் தேர்வானார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் செய்தது தவறு இல்லை.. உங்களுக்கு நல்ல பெயர் வரணும்னா இதைசெய்யுங்க.. டிடிவி. தினகரன்..!

தமிழர்களுக்கு மட்டுமே பணி

தமிழ்நாட்டில், பொறியியல் படித்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்நிலையில்தான் வெளிமாநிலத்தவர் 38 பேர் துணை மின் பொறியாளர் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக அரசு பணிகளில் தமிழர்களுக்கு மட்டுமே பணியிடம் என மாற்றியமைக்கப்பட்டது.

வட மாநிலத்தவர்களுக்கு பணி வழங்குவது ஏன்.?

இந்தநிலையில் தமிழக அரசின் மின் வாரிய பணிகளில் வட மாநிலத்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொண்டு வருவதாக பாஜக புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மாநிலதுணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,தமிழ் நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (Tangedco) பணியாற்றுவோரின் எண்ணிக்கை சுமா‌ர் 84,000. ஒவ்வொரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் ரூபாய். 1.24 செலவிடப்படுகிறது.  

தமிழ் நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (Tangedco) பணியாற்றுவோரின் எண்ணிக்கை சுமா‌ர் 84,000. ஒவ்வொரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் ஒவ்வொரு ஊழியருக்கும் ரூபாய். 1.24 செலவிடப்படுகிறது. ஊழியர்களுக்கு அதிகமாக செலவிடுவதில் இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலம். ஆனாலும், தனியார்(1/3) pic.twitter.com/WZJqMKfgve

— Narayanan Thirupathy (@narayanantbjp)

 

ஊழியர்களுக்கு அதிகமாக செலவிடுவதில் இந்தியாவிலேயே  இரண்டாவது மாநிலம். ஆனாலும், தனியார்ஒப்பந்ததாரர்கள் அதிகளவில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது, அதிலும் வட  மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படுவது ஏன்? மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக பொங்கி எழும் தி மு க தலைவர் மு க ஸ்டாலின் மாநில அரசு பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதோடு, வட மாநிலத்தவர்களுக்கு வழங்கி தமிழர்களுக்கு  அநீதி இழைக்கலாமா? துரோகம் செய்யலாமா? இது நியாயமா? நீதியா என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆளுநருக்கு எதிராக போராட்டம் தேவையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த வானதி சீனிவாசன்

click me!