ஆளுநருக்கு எதிராக நேரடியாக களத்தில் இறங்கும் திமுக..! ஆர்.என்.ரவியை மாற்ற டி.ஆர் பாலு தலைமையில் புதிய திட்டம்

By Ajmal Khan  |  First Published Jan 11, 2023, 8:15 AM IST

தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக அரசியல் கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில்,  குடியரசு தலைவரை சந்தித்து புகார் மனு அளிக்க திமுக எம்பிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக குடியரசு தலைவரிடம் நேரம் கேட்டுள்ளனர்.


தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் விலக்கு மசோதாவில் தொடங்கிய பிரச்சனை தற்போது ஆன் லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதா வரை நீடித்து வருகிறது. இது ஒருபுறம் என்றால் மற்றொரு பக்கம் அரசு நிகழ்வில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை கூறிவருவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அதிர்ச்சிஅடையவைத்துள்ளது. மேலும் திருக்குறளில் ஆன்மிக கருத்துகள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறி ஆளுநர் தொடர்ந்து சர்ச்சை நாயகனாக உருவெடுத்துள்ளார். இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் தனது உரையில் தமிழக அரசு ஒப்புதல் அளித்த உரையை படிக்காமல் கூடுதல் வார்த்தைகள் சேர்த்தும், ஒரு சில வார்த்தைகளை தவிர்த்தும் பேசியிருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் செய்தது தவறு இல்லை.. உங்களுக்கு நல்ல பெயர் வரணும்னா இதைசெய்யுங்க.. டிடிவி. தினகரன்..!

Tap to resize

Latest Videos

இந்த சம்பவம் ஆளும் கட்சியான திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் அதிர்ச்சி அடையவைத்தது. இதனையடுத்து ஆளுநரின் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் பதிலடி கொடுத்தார். இதனையடுத்து சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறி பரபரப்பை உண்டாக்கினார்.இந்த அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்ததாக ஆளுநர் மாளிகை சார்பாக அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழ் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருநாள் விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி என அச்சடிக்கப்பட்டிருந்தது. தற்போது பொங்கல் பண்டிகை அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்த அழைப்பிதழுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தமிழக கட்சிகளை மீண்டும் சீண்டிய ஆர்.என்.ரவி.! பொங்கல் விழா அழைப்பிதல்.! தமிழ்நாட்டில் இருந்து தமிழகமாக மாற்றம்

மேலும் இதுவரை தமிழ்நாடு அரசின் முத்திரையை பதிவு செய்து வந்த ஆளுநர் தற்போது இந்திய அரசின் முத்திரையை பதிவு செய்து அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முத்திரையில் தமிழ்நாடு என இருப்பதால் அதனை ஆளுநர் தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஆளுநருக்கு எதிராக புகார் அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகை நேரம் ஒதுக்கும் பட்சத்தில் ஆளுநருக்கு எதிராக புகார்களை பட்டியலிட்டு அளிக்க திமுக தலைமை முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

ஆளுநருக்கு எதிராக போராட்டம் தேவையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த வானதி சீனிவாசன்

 

click me!