தேவர் சிலை தங்க கவசம் யாருக்கு..? ஓபிஎஸ்ம் இல்லை, இபிஎஸ்ம் இல்லை..! புதிய முடிவு எடுக்கும் வங்கி நிர்வாகம்

By Ajmal Khan  |  First Published Oct 4, 2022, 8:34 AM IST

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வங்கி பெட்டகத்திலிருந்து ஒப்படைப்பதில்  ஈபிஎஸ் ஒபிஎஸ் தரப்பு மாறி மாறி உரிமை கோருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கி நிர்வாகம் புதிய முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 


தேவர் சிலைக்கு தங்க கவசம்

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014-ம் ஆண்டு 3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார்.  அந்த தங்க கவசம்  மதுரை அண்ணநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவின் போது வங்கிக்கு நேரில் வந்து கவசத்தை பெற்று முத்துராமலிங்கத் தேவர் குடும்பத்தினர் - நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைத்து வந்தார். இந்தநிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக  நியமிக்கப்பட்டார். இதனையடுத்து இந்த தங்க கவசத்துக்கு உரிமை கோருவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் கடந்த வாரம் எழுத்துப்பூர்வ கடிதத்தை அதிமுக சார்பில் கடந்த வாரம் வங்கி நிர்வாகத்திடம் அளித்திருந்தனர். அதற்கு வங்கி நிரவாகம் பரிசீலனை செய்வதாக தெரிவித்திருந்தது. 

Tap to resize

Latest Videos

அதிமுகவில் அதிகார மோதல்

இந்நிலையில், ஒபிஎஸ் அதிமுக பொருளாளராக நீடிப்பதாக கூறி ஒ.பன்னீர்செல்வத்திடம் தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி அவரது சார்பாக ஒபிஎஸ்  ஆதரவாளர்களான ராஜ்யசபா எம்.பி தர்மர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ. பாலகிருஷ்ணன் வங்கியில் கடிதத்தை வழங்கி உள்ளதால் தங்க கவசத்தை ஒப்படைப்பதில் இருதரப்பும் உரிமை கோருவதால் வங்கி நிர்வாகம் குழப்பம் அடைந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் எம்பி கோ. பாலகிருஷ்ணன் கூறுகையில்,  எங்கள் தரப்பின் சார்பில் வழக்கம் போல ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கையெழுத்திட்டு தங்க கவசத்தை பெறுவதற்கான கோப்புகளை வங்கி அதிகாரியிடம் வழங்கினோம். வங்கி அதிகாரிகள் எதிர் தரப்பில் இருந்தும் கோப்புகள் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர் இரண்டையும் பரிசீலித்து அவர்கள் முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில்  எங்கள் தரப்பிற்கு உரிமை கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு தங்க கவசம் வழங்கப்பட்ட விவகாரம்... உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் மனு!!

மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு தங்க கவசத்திற்கு போட்டி போடுவதால் வங்கி நிர்வாகம் குழப்பம் அடைந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் யாருக்கோ ஒருவருக்கு தங்க கவசத்தை கொடுத்தால் நீதிமன்றத்தை மீறி செயல்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என வங்கி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. எனவே  கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில்  சசிகலா தரப்போடு பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக ஓபிஎஸ் நீக்கப்பட்டிருந்தார். அப்போதும் பொருளார் திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது இரு தரப்புக்கும் தங்க கவசத்தை வழங்காமல் மாவட்ட நிவாகத்திடம் கவசம் ஒப்படைக்கப்பட்டது. அதே நடைமுறை பின்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

click me!