பாஜகவை எதிர்க்கும் கூட்டணியாக அமமுக தலைமையிலான கூட்டணி அமையும்.. அடித்து தூக்கும் எஸ்டிபிஐ நெல்லை முபாரக்.

By Ezhilarasan BabuFirst Published Mar 11, 2021, 4:49 PM IST
Highlights

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்தியா சமூக ஜனநாயக கட்சி (SDPI) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் SDPI கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஒபந்தம் கையெழுத்தானது. 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்தியா சமூக ஜனநாயக கட்சி (SDPI) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் SDPI கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஒபந்தம் கையெழுத்தானது. SDPI கட்சியின் தேசிய துணை தலைவர் தெகலான் பாகவி. மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் அமமுக சார்பில் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் முன்னிலையில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. 

பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து  பேட்டியளித்த மாநில தலைவர் நெல்லை முபாரக்,  அமமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது ஆலந்தூர் , ஆம்பூர், திருச்சி மேற்கு, பாளையங்கோட்டை , திருவாரூர், மதுரை மத்திய ஆகிய தொகுதிகள் SDPI கட்சிக்கு அமமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யதுடன் ஏன் கூட்டணி இல்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் சுமூகமான முடிவு எட்டபட்டதால் இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்டது என்றார். 

ஆரம்ப முதலே மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு  அழைத்தார்கள் நாங்கள் அதன்பேரில் அவர்களை சந்தித்தோம் மற்றபடி வேறு ஏதுமில்லை என தெரிவித்தனர். பாரதிய ஜனதாவின் எதிர்ப்பு கட்சி என்பதால் இதை ஆதரிக்கிறோம். பாரதிய ஜனதாவை எதிர்க்கும் கூட்டணியாக இது அமையும் என்றும் கூறினார். விரைவில் வேட்பாளர்களை அறிவிப்போம் எனவும் அவர் கூறினார்.  

click me!