10 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் வருமான வரித்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படும். தேர்தல் ஆணையம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 11, 2021, 4:19 PM IST
Highlights

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீடு குழு தாக்கல் செய்யும் பட்சத்தில், மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும், 

சென்னை மாவட்டத்தில் பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் உடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்:  

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் பறக்கும் படை  குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் இன்று அம்மா மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெரிவித்ததாவது: நடைபெறவிருக்கும் 2021 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல் தொடர்பான புகார்களை கண்காணிக்க 48 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 48 நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 

இக்குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும், இக்குழுவானது உதவி செயற்பொறியாளர் தலைமையில் ஒரு காவல் உதவியாளர், இரண்டு காவலர்கள் மற்றும் காணொளி பதிவு செய்பவர் ஆகியோருடன் செயல்படும். இக்குழுவானது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பான புகார்கள், அச்சுறுத்தல், மிரட்டல், சமூக விரோத கூறுகளின் இயக்கம், மதுபானம், ஆயுதங்கள் வெடிமருந்துகள் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கத்திற்காக பெரும் தொகை போன்றவற்றை கண்காணித்து தகுந்த முறையில் வீடியோ பதிவு செய்ய ஆவணப்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையத்தால் அதிக செலவினம் செய்யப்படும் தொகைகள் என கண்டறியப்பட்ட தொகுதிகளில், 

பறக்கும் படைக்குழுவினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு அரசியல் கட்சிகளால் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை சோதனையின்போது கைப்பற்றினால் இது தொடர்பான விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் எவ்வித பாரபட்சமின்றி கண்காணிப்பு பணிகளில் சிறப்பான முறையில் ஈடுபட வேண்டும். ரொக்கம், மதுபானம் அல்லது வேறு ஏதேனும் வாக்காளர்களுக்கு வழங்க பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு புகார் வரும் பட்சத்தில் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வாகனங்களை பரிசோதனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இடத்திற்கு பறக்கும்படை குழுவினரால் உடனடியாக செல்ல இயலவில்லை எனில், அந்த பகுதிக்குட்பட்ட நிலையான கண்காணிப்பு குழந்தைக்கோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் நடைபெறவிருக்கும் 2021 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளின்படி முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும், 10 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள பொருட்கள் வருமான வரித்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்படும். 

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீடு குழு தாக்கல் செய்யும் பட்சத்தில், மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும், சென்னை மாவட்டத்தில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் 27-2-2021 முதல் செயல்பட்டு வருகிறது. 10-3-2021 வரை குழுவானது புகார் அடிப்படையில் மட்டும் வாகன சோதனையின்போது முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 18 லட்சத்து 82 ஆயிரம் ரொக்கம் , சுமார் 73 கிராம் தங்கம், 28,592 கிலோ கிராம் வெள்ளி 2960 கிலோ அரிசி மற்றும் சேலைகள் பாத்திரங்கள் மற்றும் சால்வைகள் போன்ற இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
 

click me!