Exclusive: ராஜேந்திர பாலாஜியை வீழ்த்த நிருபர் மீது கொலைவெறித்தாக்குதல்..? அடேங்கப்பா ராஜவர்மன்..!

By Thiraviaraj RMFirst Published Mar 11, 2021, 4:06 PM IST
Highlights

அதன் பிறகு ராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தப்பி விட்டார். அது ஒருபுறமிருக்கட்டும். 
 

ராஜேந்திர பாலாஜியை வீழ்த்துவாரா ராஜவர்மன்? விருதுநகரில் உச்சகட்ட மோதல்’’என்கிற தலைப்பில் கடந்த மார்ச் மாதம் பிரபல புலணாய்வு இதழில் நிருபர் காத்தி ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். அதில், வளர்ந்த கடா மார்பில் பாய்ந்த கதையாக அமைச்சரால்  அரசியல் அரிதாரம் பூசி கோட்டைக்கு அழைத்து வரப்பட்டவர் ராஜவர்மன், இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வாள் சுழற்றவே அதிர்ந்து நிற்கிறது தென் தமிழகம் என எழுதியிருந்தார். இந்த கட்டுரை வெளியான சில தினங்களுக்கு பிறகு சிவகாசி நிருபர் கார்த்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துக் கொண்டார் நிருபர் கார்த்தி. அந்தத் தாக்குதலுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தான் காரணம் என பலரும் கொந்தளித்தனர்.

 

அதன் பிறகு ராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தப்பி விட்டார். அது ஒருபுறமிருக்கட்டும். ராஜேந்திர பாலாஜி எதிர்த்து வந்த சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., ராஜவர்மனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதேபோல் சிவகாசி தொகுதியில் இருந்து ராஜபாளையத்திற்கு தொகுதி மாறி போட்டியிட விரும்பிய அவர், கௌதமியிடம் இருந்து தட்டி பறித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் 2016ம் ஆண்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் எதிர்கோட்டை சுப்ரமணியன். இவர் டி.டி.வி.தினகரனின் முகாமிற்கு சென்றதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து ராஜேந்திர பாலாஜியின் தீவிர ஆதரவாளராக இருந்த ராஜவர்மன் சாத்தூர் தொகுதிக்கு நடந்த 2019 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார். 

ஆனால் அதற்கு பிறகு மெல்ல மெல்ல, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், ராஜவர்மனுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்தது. ஒரு கட்டத்தில் ராஜேந்திர பாலாஜி மீது கடும் குற்றச்சாட்டுகளை ராஜவர்மன் கூறி வந்தார். இதனால் மோதல் அதிகரித்தது. இத்தனைக்கும் ராஜேந்திர பாலாஜியின் சிஷ்யனாக இருந்தவர் ராஜவர்மன். அந்த சீட் கிடைக்கவே ராஜேந்திர பாலாஜிதான் காரணம். 

தற்போது சாத்தூர் தொகுதியில் போட்டியிட ராஜவர்மனுக்கு சீட் வழங்கப்படவில்லை. அதற்கு பதில் விருதுநகர் மாவட்ட கிழக்கு செயலாளர் ரவிச்சந்திரனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ராஜவர்மன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் விரக்தியான ராஜவர்மன்,’’மக்களுக்கு சிறந்த முறையில் பணியாற்றி உள்ளேன். உண்மை நிலவரத்தை முதல்வர், துணை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த 8 மாதங்களாக விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் இல்லாமல் இருந்தது. இப்போது 2 மாவட்டமாக பிரித்து கட்சி விட்டு கட்சி மாறியவரை அமைச்சர் அழைத்து வந்து அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சரின் கைக்கூலிக்குத்தான் பதவி என்றாகிவிட்டது. அதிமுக இயக்கத்திற்காக பாலாஜியா அல்லது பாலாஜிக்காக அதிமுகவா என்று தெரியவில்லை. அவரை எதிர்த்ததால் எனக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது" என்று ஆவேசமானார்.

 

இப்போது மீண்டும் நிருபர் கார்த்தி விஷயத்திற்கு வருவோம். எப்படியாவது ராஜேந்திர பாலாஜிக்கு அவப்ப்யெரை ஏற்படுத்தி விட்டு குருவை மிஞ்சிய சிஷ்யன் என்கிற நிலைப்பாட்டிற்கு வர  வேண்டும் ( கிட்டத்தட்ட அரசியல் அமாவாசையாக) எனத் திட்டமிட்டார் ராஜவர்மன். நிருபர் கார்த்தி எழுதிய அந்தக் கட்டுரையில் ராஜவர்மனின் செயல்பாடுகள் குறித்து தான் எழுதப்பட்டிருந்தது. இதனை சாக்காக வைத்து, ராஜேந்திரபாலாஜி மீது பழியை தூக்கிப்போட நினைத்தார் ராஜவர்மன். நிருபர் கார்த்தி தாக்கப்பட்டார். அந்தப் பழி ராஜேந்திரபாலாஜி மீது விழுந்தது. அடுத்து அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனது. அமைச்சர் பதவியும் பறிபோகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என யூகிக்கப்பட்டது. 

ஆனால் அந்த பழி பாவத்தில் இருந்து தப்பி விட்டார் ராஜேந்திரபாலாஜி. எல்லோரும் நிருபர் கார்த்தி தாக்கப்பட்டதற்கு காரணம் ராஜேந்திரபாலாஜி என சந்தேகித்தனர். ஆனால் அப்போது நடந்ததே வேறு என்கிறார்கள் சிவகாசியை சேர்ந்த நிருபர்கள். அவர்கள் கூறும்போது, ‘’கார்த்தியை தாக்கியதே ராஜவர்மன் ஆட்கள்தான். அந்தப்பழியை ராஜேந்திரபாலாஜி மீது சாற்றிவிட்டு அரசியல் லாபம் பார்க்க திட்டமிட்டார் ராஜவர்மன். அதன்படி கார்த்தி தாக்கப்பட்டு உயிருக்கு போராடும்போது அங்கு காரில் மறைந்திருந்து பார்த்துவிட்டு சென்ற ராஜவர்மன், அப்படியே காரை கிளப்பிக் கொண்டு வெளியூர் சென்று விட்டார். இரண்டு நாட்கள் அவர் ஊருக்கே வரவில்லை. இதன் மூலம் ராஜவர்மன், ராஜேந்திர பாலாஜி மீது பழியை சுமத்த அந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தினார். இது தான் உண்மை’’என்கிறார்கள்.

   

click me!