நம்பிக்கெட்டேன்... வீட்டைக் காலி செய்யும் கவுதமி..!

Published : Mar 11, 2021, 03:12 PM IST
நம்பிக்கெட்டேன்... வீட்டைக் காலி செய்யும் கவுதமி..!

சுருக்கம்

கமலை விட்டு பிரிந்து சென்ற நடிகை கவுமதமி பாஜகவில் ஐக்கியமானார். பாஜகவில் தனக்கு சீட் கிடைக்கும் என்கிற அதீத நம்பிக்கையில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் ராஜபாளையம் தொகுதியை குறி வைத்தார்.   

கமலை விட்டு பிரிந்து சென்ற நடிகை கவுமதமி பாஜகவில் ஐக்கியமானார். பாஜகவில் தனக்கு சீட் கிடைக்கும் என்கிற அதீத நம்பிக்கையில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் ராஜபாளையம் தொகுதியை குறி வைத்தார்.

எப்படியும் அந்தத் தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என்கிற நம்பிக்கையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக ராஜபாளையத்தில் வீடு எடுத்து தங்கி கட்சி பணியாற்றி வந்தார். ஆனால், ராஜபாளையம் தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், விரக்தியான கவுதமி, ‘’இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அன்பின் வாயிலாக  கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்’’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  சீட் கிடைக்காததால் அவர் தனது ராஜபாளையம் வீட்டை காலி செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

PREV
click me!

Recommended Stories

TVK Vijay: த.வெ.க ஆட்சி அமைக்க தி.மு.க இடையூறு செய்யாது - மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
TVK VIJAY: விஜய்க்கு முதலமைச்சர் பாதுகாப்பு வாபஸ்.! ஆளுநரின் உத்தரவால் மாறிய அரசியல் களம்!