திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை?... வெளியானது பட்டியல்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 11, 2021, 2:30 PM IST
Highlights

ஏற்கனவே பொள்ளாச்சி, திருச்செங்கோடு, பெருந்துறை, அரவக்குறிச்சி, ஈரோடு மேற்கு என 5 தொகுதிகளில் ஏதேனும் மூன்றை ஒதுக்கீடு செய்யுமாறு கொங்கு ஈஸ்வரன் ஸ்டாலினிடம் கேட்டிருந்தார். 

​திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இ.யூ.முஸ்லிம் லீக், கொமதேகவுக்கு  தலா 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. 

அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, பார்வார்டு பிளாக் கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த வகையில் 61 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, எஞ்சிய 174 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 61 தொகுதிகளில் 14 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எனவே, திமுக போட்டியிடும் 174 பிளஸ் 13 தொகுதிகளையும் சேர்த்தால், உதயசூரியன் சின்னம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது. 

தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை திமுக ஒதுக்கி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை போட்டியிட உள்ள தொகுதிகளை திமுக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக திமுக கூட்டணியில் பங்கேற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிட உள்ள 3 தொகுதிகள் என்ன என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் உடன் ஆலோசனை நடைபெற்றது. 

ஏற்கனவே பொள்ளாச்சி, திருச்செங்கோடு, பெருந்துறை, அரவக்குறிச்சி, ஈரோடு மேற்கு என 5 தொகுதிகளில் ஏதேனும் மூன்றை ஒதுக்கீடு செய்யுமாறு கொங்கு ஈஸ்வரன் ஸ்டாலினிடம் கேட்டிருந்தார். அதன்படி திருச்செங்கோடு, சூலூர், பெருந்துறை ஆகிய 3 தொகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் அதிமுகவை நேரடியாக எதிர்த்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

click me!