ஜெயலலிதா உற்சவர்.. சசிகலா மூலவர்... அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.. ராஜவர்மன் சரவெடி...!

By vinoth kumarFirst Published Mar 11, 2021, 1:44 PM IST
Highlights

 38 ஆண்டுகளாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக இருந்தவர் சசிகலா. எம்எல்ஏவுக்கே பாதுகாப்பு இல்லாத போது ஓபிஎஸ், இபிஎஸ் எப்படி மக்களை காப்பாற்றுவார்கள். சத்தியமாக சொல்லுகிறேன் அதிமுகவை ஆண்டவானாலும் காப்பாற்ற முடியாது.

சட்டமன்ற தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜவர்மன்;- தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவோடு அமமுகவில் இன்று இணைந்துள்ளேன். 38 ஆண்டுகளாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக இருந்தவர் சசிகலா. எம்எல்ஏவுக்கே பாதுகாப்பு இல்லாத போது ஓபிஎஸ், இபிஎஸ் எப்படி மக்களை காப்பாற்றுவார்கள். சத்தியமாக சொல்லுகிறேன் அதிமுகவை ஆண்டவானாலும் காப்பாற்ற முடியாது. சசிகலா ஒருவரால்தான் அதிமுகவை காக்கமுடியும். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தலையீட்டால் தமக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை உழைப்பவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. வெற்றி வாய்ப்புள்ள யாருக்கும் அதிமுகவில் சீட் வழங்கப்படவில்லை என ராஜவர்மன் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலுக்கு பின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முடிவு செய்யும் இடத்தில் இருப்பார். இரண்டாண்டு காலமாக நான் ஆற்றிய பணிகள் என் தொகுதி மக்களுக்கு தெரியும். மக்களின் ஆதரவோடு, நிர்வாகிகள் வேண்டுதலோடுதான் அமமுகவில் இணைந்துள்ளோம்.

இது ஆரம்பம் மட்டுமே. சின்னம்மாவுக்கு செய்த துரோகத்திற்காக, மக்கள் அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். அனைத்து சமுதாய மக்களும் இருக்கும் இடம் சாத்தூர் தொகுதி. ராஜேந்திர பாலாஜி செய்ததை யாரும் மறக்கமாட்டார்கள். அவர் காசு, பணம், பதவி இருக்கும் திமிறில் பேசி வருகிறார். வெயிட் அன் சீ. முதல்வர், துணை முதல்வருக்கு சாத்தூர் தொகுதியில் நடக்கும் பிரச்சனைகள் தெரியும். இனி அதிமுகவை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. அனைத்து சமுதாய மக்களுக்கும் நன்மை செய்தவர் சசிகலா. சசிகலாவிற்கு செய்த துரோகத்திற்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள்.  பல அமைச்சர்கள், எம்எல்ஏக்களை உருவாக்கியவர் டிடிவி.தினகரன். 

தேர்தலில் அதிமுக தோல்வியடையும் என்பதால் தான் சசிகலா விலகி இருக்கிறார். ஜெயலலிதா உற்சவர். சசிகலா மூலவர். அம்மா வரும் போது சாமி கூம்பிட முடியும். ஆனால், அங்கு மூலவராக இருப்பவர் சசிகலா. ஜெயலலிதாவை இயக்கியதே சசிகலா தான். சசிகலா அமைதியாக இல்லை. இந்த தேர்தல் முடிவிற்காக காத்திருக்கிறார்கள் நிரந்தரமாக அதிமுகவை சின்னம்மா மட்டுமே காப்பாற்றுவார். உண்மை உறங்கி கொண்டிருக்கிறது. பொய்கள் நடமாடி கொண்டிருக்கிறது என ராஜவர்மன் கூறியுள்ளார். 

click me!