அடுத்தடுத்துவந்த வாகனங்களில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்.. அதிர்ந்த தேர்தல் அதிகாரிகள்.

By Ezhilarasan BabuFirst Published Mar 11, 2021, 1:35 PM IST
Highlights

சென்னை அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் இரண்டு வாகனங்களில் கணக்கில் வரதாத 44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்லாவரம் தேர்தல் அதிகாரி உத்திரவின் பேரில் அந்த பணம் ஆலந்தூர் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.  

சென்னை அருகே தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனையில் இரண்டு வாகனங்களில் கணக்கில் வரதாத 44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்லாவரம் தேர்தல் அதிகாரி உத்திரவின் பேரில் அந்த பணம் ஆலந்தூர் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி பறக்கும் படை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பணம், பரிசு பொருட்கள் கடத்தல் சம்மந்தமாகவும், தேர்தல் விதிமீறல்கள் நடவடிக்கை எடுக்க தொகுதிவாரியாக  சுற்றி சுழன்று வருகின்றனர். 

சென்னை அடுத்த பல்லாவரம் தொகுதி திருநீர்மலை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவை சேர்ந்த அதிகாரி அடுத்தடுத்து இரு வாகனங்களை சோதனை செய்தனர் அது  தனியார் ஏஜென்சியாக செயல்பட்டு பல்வேறு ஏ.டி.எம் களுக்கு பணம் எடுத்து செல்லும் வாகனம் என தெரிய வந்தது. தேர்தல் அதிகாரி முன்பாக திறந்து பார்தபோது ஒரு வாகனத்தில் 40 லட்சமும், மற்றொரு வாகனத்தில் 4 லட்சம் என இரண்டு வாகனத்திலும் சேர்த்து 44 லட்சம் ரூபாய் கண்டறிப்பட்டது. 

அதில் இருந்த கட்டுக்கட்டாண பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.  இதனையடுத்து அப்பணத்தை கைப்பற்றி பல்லாவரம் தேர்தல் அதிகாரி லலிதா உத்திரவின்பேரில் பம்மலில் உள்ள ஆலந்தூர் கருவூலத்திற்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டது.  ஒரே நேரத்தில் இரு வாகனத்தில் 44 லட்சம் பிடிபட்டது தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 
 

click me!