3வது முறையாக வெற்றி வாகை சூடுவாரா வேல்முருகன்?... பண்ருட்டியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டி...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 11, 2021, 12:55 PM IST
Highlights

தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் சந்திக்க உள்ளன. அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், யாருக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுக ஆலோசித்து வருகிறது. 

ஏற்கனவே வைகோவின் மதிமுக கட்சிக்கு தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிட உள்ள  ஒரு தொகுதி என்ன என்பதை திமுக அறிவித்துள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளை எப்படியாவது வாங்கி விட வேண்டுமென வேல்முருகன் முயற்சி செய்தார். அதற்காக தங்களுக்கு நெய்வேலி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளை ஒதுக்கும் படியும் கேட்டு வந்தார். 

ஆனால் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தமும் கையெழுத்தானது. தற்போது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாமக சார்பில் போட்டியிட்டு வென்ற வேல்முருகன் 2001 முதல் 2011ம் ஆண்டு வரை பண்ருட்டி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். பண்ருட்டி தொகுதியில் அதிமுக சார்பில், முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ராஜேந்திரன் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், ஏற்கனவே பண்ருட்டி தொகுதியில் 2 முறை வென்றிருக்கிறேன். இந்த முறையும் பண்ருட்டி தொகுதி மக்கள் என்னை அதிக வாக்குகல் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கையுள்ளது. அதிமுக கூட்டணி பலவீனமடைந்து வருகிறது. தேமுதிக கூட்டணியை விட்டு விலகியதால் கணிசமான வாக்குகள் சிதறும் என்றும், திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். 
 

click me!