திமுகவை திக்குமுக்காட வைக்கும் தினகரன்... அமமுக கூட்டணியில் இணைந்த முக்கிய கட்சி..!

By vinoth kumarFirst Published Mar 11, 2021, 4:19 PM IST
Highlights

அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆலந்தூர், ஆம்பூர் உள்ளிட்ட 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஆலந்தூர், ஆம்பூர் உள்ளிட்ட 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், அமமுகவை சேர்ந்த டிடிவி.தினகரன் இன்னும் சில கட்சிகளும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறி வருகிறார். இதுவரை  ஓவைக்கு கட்சிக்கு 3 தொகுதிகளும், மருது சேனை சங்கம், கோகுல மக்கள் கட்சி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சிக்கும், மக்களரசு கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இந்நிலையில், அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு ஆலந்தூர்,ஆம்பூர்,திருச்சி மேற்கு,மதுரை மத்தி, திருவாரூர், பாளையங்கோட்டை ஆகிய 6 தொகுதிகளை அமமுக ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெகலான் பாகவி;- எஸ்டிபிஐ கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் தான் முதலில் பேசியது. மக்கள் நீதி மய்யத்துடன்  எஸ்டிபிஐ பேசியதாக நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அமமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் சுமூகமாக முடிந்துள்ளதால் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றார். மேலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவை தீவிரமாக எதிர்க்க கூடிய கட்சியாக அமமுக உள்ளது என்றும் திமுக மட்டுமே பாஜகவை எதிர்க்கும் கூட்டணி என்று தாம் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

ஏற்கனவே அமமுக கூட்டணியில் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் ஏ இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சி இடம் பெற்றுள்ளது. ஓவைசி தமிழ்நாட்டில் வந்து பிரச்சாரம் செய்தால் இஸ்லாமிய வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே செல்லும் என்ற நிலை மாறவும் வாய்ப்புள்ளது. எனவே ஓவைசி தினகரன் கூட்டணி திமுகவுக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

click me!