
அதிமுக அரசு ஜெயலலிதாவால உருவாக்கப்பட்டது என்றும் இந்த அரசு யாராலும் ஏற்படுத்தியது கிடையாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்றார். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் அரசின் தலையாய கடமை என்றும் கூறினார்.
இலங்கை வசமிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் மீட்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியா - இலங்கை கூட்டு பணிக்குழு பேச்சவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது.
அதிமுக அரசு ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டது. வேறு யாராலும் ஏற்படுத்தியது கிடையாது என்றார். ஜெயலலிதாவின் அரசு கலைந்துவிடக் கூடாது என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதேபோல் எதிரிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
தினகரன் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமர், சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது தினகரன் பேச்சு என்றார். நடராசனுக்காக ஆடும் தசை, ஜெயலலிதாவுக்காக ஆடியிருக்க வேண்டும்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, பல்வேறு தரப்பினர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், தினகரன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சார்பில் எந்தவொரு பிரார்த்தனையும் செய்யவில்லை; தினகரன் பிரார்த்தனை செய்தாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் செல்லூர் ராஜு தான் ஸ்லீப்பர் செல் இல்லை என்று கூறிவிட்டார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.