வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்..! விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன..? புதிய அறிவிப்புகள் வெளியாகுமா.?

By Ajmal Khan  |  First Published Mar 21, 2023, 8:44 AM IST

இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம், நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை இந்த பட்ஜெட்டில்  உயர்த்தி வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். 


தமிழக வேளாண் பட்ஜெட்

தமிழக நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 23,24,27,28 ஆகிய தேதிகளில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து 28 ஆம் தேதி நிதி அமைச்சர் உறுப்பினர்களின் கேள்விக்களுக்கு பதிலளித்து பேசவுள்ளார். இந்தநிலையில் இன்று வேளாண் பட்டஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இந்த வேளாண் பட்டஜெட்டில் விவாசியிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 யாருக்கு கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது? அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்.!

புதிய அறிவிப்புகள் என்ன.?

வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்படவுள்ள அறிவிப்புகள், தங்களது கோரிக்கைகளை உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன் படி பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்திருந்தனர். குறிப்பாக  தமிழகத்தில் கரும்பு ஆலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், விவசாயிகள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த கரும்பு ஆலைகளை திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இயற்கை விவசாயத்தை காக்கும் பொருட்டு ஆந்திர மாநிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கப்படுகிறது.

இயற்கை விவசாயத்திற்கு ஊக்கத்தொகை

அதே போல் தமிழ்நாட்டிலும் உதவித் தொகை வழங்கினால் இயற்கை விவசாயமும் காக்கப்படும் எனவும்  விவசாயிகளும் காக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே இது பொன்ற அறிவிப்பு வெளியாகுமா என விவசாயிகள் காத்துள்ளனர்.  சிறுதானிய பயிர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதுடன், நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை இந்த பட்ஜெட்டில்  உயர்த்தி வழங்கப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

தமிழக பட்ஜெட் நம்பிக்கைத் துரோகத்தின் ஒட்டுமொத்த உருவம்..! திமுக அரசை விளாசும் ஓபிஎஸ்

click me!