உலகத்துல பெரிய ஆள்னு நினைப்பா..? சீட் கொடுக்காததால் அறிவாலயத்துக்கே வந்து ஸ்டாலினுக்கு ஜெர்க் காட்டிய நிர்வாகி

Published : Mar 12, 2021, 05:21 PM IST
உலகத்துல பெரிய ஆள்னு நினைப்பா..? சீட் கொடுக்காததால் அறிவாலயத்துக்கே வந்து ஸ்டாலினுக்கு ஜெர்க் காட்டிய நிர்வாகி

சுருக்கம்

இரண்டு முறை திமுக சார்பாக விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தனசேகரன், இம்முறை தனக்கு நிச்சயம் விருகம்பாக்கம் தொகுதியில் சீட் கிடைக்கும் என நம்பியிருந்தார்.

இரண்டு முறை திமுக சார்பாக விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தனசேகரன், இம்முறை தனக்கு நிச்சயம் விருகம்பாக்கம் தொகுதியில் சீட் கிடைக்கும் என நம்பியிருந்தார்.

 ஆனால், எதிர்பாராத வணிகர் சங்கத்தலைவர் விக்ரம ராஜாவின் மகன் பிரபாகர் ராஜாவுக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் விரக்தியான தனசேகரன் திமுகவில் இருந்து விலகப் போவதாகவும் தனது கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறி அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ’’மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி இந்த தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருந்தோம். ஆகையால், பிரபாகர் ராஜாவுக்கு சீட் கொடுத்ததை மு.க.ஸ்டாலின் மறு பரிசீலனை செய்வார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஆனாலும், விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள 80 சதவிகித திமுக நிர்வாகிகள் தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்கள். ஆனால், நாங்கள் திமுகவுக்கு துரோகம் செய்ய மாட்டோம். மு.க.ஸ்டாலின் பரிசீலனை செய்தால் அதனை நாங்கள் கேட்டுக் கொள்வோம். 

எங்களது ராஜினாமா கடிதத்தை அமைப்புச் செயலாளரிடம் கொடுத்து விட்டோம். கடிதம் கொடுத்து விட்டோம். ஸ்டாலினிடம் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வருகிறோம் என சொல்லி இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் நாங்கள் இப்பொழுது இருக்கிறோம். தலைமை எந்த அடிப்படையில் பிரபாகர் ராஜாவுக்கு சீட் கொடுத்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், பிரபாகர் ராஜா பற்றிய புகார்களை நாங்கள் சேகரித்து கொடுத்திருக்கிறோம். அதனை வைத்து முகஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம். 

பிரபாகர் ராஜாவின் கல்யாணத்திற்கு ஓபிஎஸ்- இபிஎஸ் அனைவரும் வந்திருந்தனர். அவர்கள் அதிமுகவிற்கு விசுவாசமானவர்கள். இதை நாங்கள் சொல்லவில்லை. அவரது திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அதை பறைசாற்றுகின்றன. நாங்கள் முகஸ்டாலின் நம்புகிறோம். இரண்டு முறை நான் இந்த தொகுதியில் தோற்று இருந்தாலும் விருகம்பாக்கம் தொகுதியை பொறுத்தவரையில், முன்பு இதே தொகுதியில் டி.ஆர்.பாலு நின்றார்கள் அந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை. ஆர்.எம்.வீரப்பன் நின்றார். அவரும் வெற்றி பெறவில்லை. டி.கே.எஸ்.இளங்கோவன் நின்றார். அவரும் வெற்றி பெறவில்லை. அப்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது உதயசூரியன்.

ஆகையால் தனசேகரன் என்ற ஒரு தனிப்பட்ட நபருக்காக வாக்களிக்கவில்லை என்று யாரும் நினைக்க வேண்டாம். பம்மல் நல்லதம்பி, சண்முகம், நெப்போலியன், ரங்கநாதன், தா.மோ.அன்பரசன் போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் போட்டியிட்டு தோற்ற தொகுதிதான் இந்த விருகம்பாக்கம். ஆனால் எப்படியாவது இந்த தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக 10,000 மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினேன். மாவட்ட செயலாளர் என்பவர் உலகத்துக்கு பெரிய ஆள் என்பவர் போல காட்டிக் கொள்கிறார். அது தவறு மாவட்ட செயலாளர் என்றால் கழகத்தில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். வேண்டப்பட்டவர்கள் இருப்பார்கள், வேண்டாதவர்கள் இருப்பார்கள். விருப்பு வெறுப்புகள் இன்றி மாவட்ட செயலாளர்கள் நடந்து கொள்ள வேண்டும்.’’ எனத் அவர் தெரிவித்துள்ளார்.  

PREV
click me!

Recommended Stories

vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் நடக்கிறது..! வெறுப்பில் அதிமுகவில் இணைந்த செங்கோட்டையன் அண்ணன் மகன்..!