எழுதி கொடுக்கும் துண்டு சீட்டையே சரியாக படிக்காதவர்கள்.. மநீம மேடையில் போட்டுத்தாக்கிய பழ. கருப்பையா.?

By Ezhilarasan BabuFirst Published Mar 12, 2021, 5:11 PM IST
Highlights

எங்களில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று ஒரு கட்சியும், வழி வழியாக நாங்கள் தான் ஆட்சி என்று ஒரு கட்சி செய்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், 3ம் அணி எப்படி ஜெயிக்க முடியும் என்று கேட்கிறீரார்கள்,  

மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அக்கட்சித்தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தொகுதி சார்பில் 43 வேட்பாளர்கள், புதுச்சேரியில் 18 வேட்பாளர்களை அறிவித்தார். 

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவர் பேசியதாவது, கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் பேசு பொருளாக மாறி இருப்பதாகவும், அதற்காக ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார். மேலும், ஏற்கனவே செய்த சாதனைகள் தான் எங்கள் வேட்பாளர்களின் தேர்வு என கூறிய அவர், இவர்கள் வேட்பாளர்கள் மட்டும் அல்ல ம.நீ.ம தமிழகத்திற்கு தரும் அன்பு பரிசு என்றும், இது மக்களுக்கு நாளை புரியும் என்றும், நவீன அரசியல் யுகம் பிறந்ததற்கான அடையாளம் இவர்கள் எனவும் பெருமிதம் கொண்டார். 

செல்வமும், புகழும் எனக்கு இரண்டு ஜென்மங்களுக்கு போதுமானது என்றாலும், மக்களுக்காக எனது வாழ்க்கையை அற்பணிப்பதாக கூறிய அவர், அரசியல் என் தொழில் அல்ல என் கடமை என்று நம்பி வந்திருக்கும் இக்கூட்டத்தின் தலைவனாக இருப்பது முதல் பெருமை  எனவும் தெரிவித்தார். பெரிய மாற்றத்தை நேர்மையானவர்கள் தான் கொண்டு வந்துள்ளதாகவும், காந்தி, கலாம், கமல் வரையில் அவ்வாரே செய்வார்கள் என்றும், கொங்கு ஊழல் கோட்டையாக மாறி இருப்பதால் அதை மாற்றி அமைக்கவே கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறேன் என கூறினார். என் தகப்பனாரின் முதல் ஆசை நான் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்பது தான் என தெரிவித்த அவர், அதை நான் நிறைவேற்றவில்லை என்றாலும், என் கட்சியில் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பழ.கருப்பையா, 

தமிழகத்தை சீரமைக்க வந்துள்ளவர் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் எனவும், வெகுகாலம் ஊழல் என்ற நிலையில் இருந்து, தமிழகம் மாறி செல்ல வேண்டும் என்றும், சிலர் 4 இடங்களை பெற வேண்டும் என்று தங்களது அடையாளங்களை இழந்து செல்வதாக கூறினார். மேலும், நிறைய கிளை கட்சிகளை பணம் கொடுத்து வாங்கிவிட்டு, அவர்கள் தான் வெற்றி பெற போகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளதாக கூறிய அவர், 50 ஆண்டுகளாக ஒரே மாதிரியான அரசியல் தான் என்றும், காந்தி வந்த பின் தான் இந்தியா மாறியது, மீண்டும் அந்த காந்தி மண்ணில் நிலை பெற வேண்டும் என்றும் கூறினார். 

எங்களில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று ஒரு கட்சியும், வழி வழியாக நாங்கள் தான் ஆட்சி என்று ஒரு கட்சி செய்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், 3ம் அணி எப்படி ஜெயிக்க முடியும் என்று கேட்கிறீரார்கள், மூன்றாம் அணியாக தான் எம்.ஜி.ஆர் வந்தார் என்றும் குறிப்பிட்டார். எழுதி கொடுக்கும் துண்டு சீட்டையே சரியாக படிக்காதவர்கள் உள்ளதாக, ம.நீ.ம கட்சியினர் ஜெயிப்பார்களா என்று கேட்காதீர்கள், வாக்களித்து ஜெயிக்க வையுங்கள் என்றும் தெரிவித்தார்.
 

click me!