சசிகலா நம்பும் அந்த எளிய நபர்... யாரந்த பிரபு..? ஜெயலலிதாவுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு..?

Published : Feb 09, 2021, 02:31 PM ISTUpdated : Feb 09, 2021, 02:33 PM IST
சசிகலா நம்பும் அந்த எளிய நபர்... யாரந்த பிரபு..? ஜெயலலிதாவுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு..?

சுருக்கம்

தொண்டர்கள் திடீரென வந்து சசிகலாவின் காரை சூழ்ந்த போதெல்லாம் மிகவும் பொறுமையாகவும், நேர்த்தியாகவும் காரை ஓட்டி வந்துள்ளார். 

சசிகலா தனது தோழியான ஜெயலலிதாவின் செயல்பாடுகளை மட்டுமல்ல. அவரது கார், அவரது கார் ஓட்டுநர் என அனைத்தையும் பயன்படுத்தி வருகிறார்.

சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் பெங்களூரூவில் இருந்து சென்னை வந்தது வரை பல சுவாரசிய நிகழ்வுகள் நடந்துள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்து விடுதலையான சசிகலா, கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டார். பின்னர் பெங்களூரூவில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர், நேற்று காலை சுமார் 7.00 மணி அளவில் பெங்களூரூவில் இருந்து சென்னை புறப்பட்டார். வழியில் தொடர்ந்து ஆதரவாளர்களை அவர் சந்தித்து வந்ததால், அவரின் வருகை தாமதமானது.

இதனிடையே அதிமுக கொடி விவகாரத்தால் கார்களை மாற்றிக்கொண்டே வந்தார். இந்த சூழ்நிலையில் தொண்டர்களின் வரவேற்பு காரணமாக இன்று அதிகாலைதான் சென்னை வந்தடைந்தார். முன்னதாக ராமாபுரத்தில் எம்.ஜி.ஆர் இல்லத்தில் மலர் தூவி மரியாதை செய்தார் சசிகலா. சசிகலாவுடன் இளவரசியும், தினகரன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சென்னை வந்தனர்.

இதற்கிடையே பெங்களூருவிலிருந்து சென்னை வரை 23 மணி நேரத்திற்கும் மேலாக சசிகலா பயணித்த நிலையில், சசிகலா பயணித்த காரை ஓட்டிய ஓட்டுநரின் பங்கு மிகப்பெரியது. சசிகலா பயணித்து வந்த காரை பிரபு என்பவர் ஓட்டி வந்துள்ளார். தொண்டர்கள் திடீரென வந்து சசிகலாவின் காரை சூழ்ந்த போதெல்லாம் மிகவும் பொறுமையாகவும், நேர்த்தியாகவும் காரை ஓட்டி வந்துள்ளார். அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!