நான் இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன்.. குலாம் நபி ஆசாத் நாடாளுமன்ற இறுதி உரை.

By Ezhilarasan BabuFirst Published Feb 9, 2021, 2:18 PM IST
Highlights

நான் இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன் பாகிஸ்தானுக்கு செல்லாத பல அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் என மாநிலங்களவையில் உரையாற்றிய குலாம்நபி ஆசாத் உருக்கமாக தெரிவித்துள்ளார்.  

நான் இந்திய முஸ்லிம் என்பதில் பெருமை கொள்கிறேன் பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் என மாநிலங்களவையில் உரையாற்றிய குலாம்நபி ஆசாத் உருக்கமாக தெரிவித்துள்ளார். இன்றுடன் அவரது பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி காங்கிரஸ் எம்பி குலாம்நபி ஆசாத் மாநிலங்களவையில் இன்று தனது கடைசி உரையாற்றினார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். 

காங்கிரஸ் எம்பி குலாம்நபி ஆசாத், ஷம்ஷர் சிங் , மிர் முகமது பயாஸ், நாதிர் அகமது  ஆகிய நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அவர்களுக்கு பிரியாவிடை கொடுக்கும் வகையில் முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (இன்று) மாநிலங்களவையில் உரையாற்றினார்.  அப்போது மோடியின் உரை உணர்ச்சி பூர்வமான இருந்தது. குறிப்பாக குலாம்நபி ஆசாத் குறித்து பேசிய அவர் உணர்ச்சியின் மிகுதியால் கண்கலங்கினார். 

குலாம் நபி குறித்து அவர் பேசியதாவது:  குலாம்நபி ஜிக்கு பிறகு இந்தப் பதவியை யார் ஏற்றுக்கொண்டாலும் அவரது இடத்தை நிரப்புவதற்கு அவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என்று நான் கவலைப் படுகிறேன். ஏனென்றால் குலாம்நபி ஜி தனது கட்சியை பற்றி கவலைப்படக் கூடியவர், அதேபோல் நாட்டையும், வீட்டையும் பற்றி  சிந்திக்கக் கூடியவர். எனது அனுபவங்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் குலாம் நபி ஆசாத்  அவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். அவரது கருணை அமைதி மற்றும் தேசத்திற்கான அயராத உழைப்பு எப்போதும் தொடரும் என நான் நம்புகிறேன் என்றார். 

இதனையடுத்து இறுதியாக பேசத்தொடங்கிய குலாம் நபி அசாத் மாநிலங்களவையில் உருக்கமாக தனது இறுதி உரையாற்றினார். அதில், பாகிஸ்தானுக்கு செல்லாத பல அதிர்ஷ்டசாலி களில் நானும் ஒருவன், பாகிஸ்தானில் நடக்கும் சில விரும்பத்தகாத விஷயங்களைப் பற்றி படிக்கும் போது நான் இந்திய முஸ்லிம்  என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன் என்றார். இதற்கிடையில் தனது முன்னோடிகளை நினைவுகூர்ந்த அவர் தான் இந்த இடத்திற்கு வர காரணமாக இருந்தவர்களில் மிக முக்கிய மானவர்களான சஞ்சய் காந்தி,  இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர்தான் என்ற அவர் அவர்கள் இறந்தபோதே நான் என் வாழ்க்கையில் அழுதேன் என்றார்.  மேலும்,  ஒடிசாவில் புயல் தாக்கியபோது நான் அழுதேன்,  உடனே அங்கு செல்லும்படி எனக்கு உத்தரவிடப்பட்டது, ஆனால் அப்போது என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு கொண்டிருந்தார், ஆனாலும் நான் அங்கு சென்றேன். 

கடந்த 2005ல் ஐந்தாவது முறையாக குஜராத்தை சேர்ந்த யாத்திரிகன் தீவிரவாத தாக்குதலில் இறந்தபோது நான் அழுதேன், நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு வரவேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இடமிருந்து நான்

அதிகம் கற்றுக் கொண்டேன், சபையை எப்படி நடத்துவது, முட்டுக்கட்டைகளை எவ்வாறு உடைப்பது போன்ற விஷயங்களை அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். இந்த தருணத்தில் பிரதமர் மோடி அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், தனக்கு எதிரான வார்த்தைகளை அவர் ஒருபோதும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டதில்லை, பல நேரங்களில் நாங்கள் வாய்மொழியாக வாக்குவாதம் செய்து இருக்கிறோம், அவர் ஒருபோதும் என் வார்த்தைகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்டதில்லை, நாடு சண்டைகளுடன்  அல்ல ஒத்துழைப்புடன் இயங்குகிறது. இந்த நேரத்தில் நான் ஒன்றை சோல்லிக் கொள்ள விரும்புகிறேன்,  நான் இந்திய முஸ்லிம் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். பாகிஸ்தானுக்கு செல்லாத பல அதிர்ஷ்டசாலிகள் நானும் ஒருவன் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன், பாகிஸ்தானில் நடக்கும் பல விரும்பதாகாத சம்பவங்களில் படிக்கும்போது நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது.
 

click me!