தஞ்சை தேர் விபத்து.. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்..!

By vinoth kumar  |  First Published Apr 27, 2022, 9:02 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் தெரிவித்துக்கொள்கிறேன். என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். 


தஞ்சாவூர் களிமேடு பகுதியில் தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தேர் விபத்து

Tap to resize

Latest Videos

undefined

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிவாரண உதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நிவாரணம் அறிவிப்பு

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர் மின்கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர் தெரிவித்துக்கொள்கிறேன். என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் மேலும், இவ்விபத்தில் 15 நபர்கள் தற்போது சிகிச்சையில் உள்ளதாக அறிகிறேன், அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் விபத்து பகுதியில் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து இலட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

click me!