செந்தில் பாலாஜி அடுத்ததாக போக உள்ள கட்சி பாஜக தான். செந்தில் பாலாஜியின் நடிப்பை ஜெயலலிதா புரிந்து கொள்ளவே காலம் தாமதம் ஆகியதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தனி மாநிலமாக கரூர்
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வாகனத்தை தாக்கி கரூர் நகராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டிக்கும் வகையில், அதிமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு உரையாற்றினார். அதிமுக தொண்டர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அவர்கள் கழகமே கோவில் என்று இருந்து வருகின்றனர். தொண்டர்களுக்காகவே உள்ள இயக்கம் அதிமுக அதனால் யாரும் கூறுவதற்கு முன்பு கரூரில் கண்டன பொதுக் கூட்டத்தை அறிவித்தவர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் என தெரிவித்தார். கரூர் ஒரு தனி மாநிலமாக உள்ளது. அதனால் தான் கரூரில் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளதாக கூறினார்.
முதல்வர் பதவி தான் இலக்கு
செந்தில் பாலாஜி அடுத்ததாக போக உள்ள கட்சி பாஜக தான். செந்தில் பாலாஜியின் நடிப்பை ஜெயலலிதா அவர்கள் புரிந்து கொள்ளவே காலம் தாமதம் ஆகியது. செந்தில்பாலாஜியின் அடுத்த திட்டமே முதல்வர் ஆவது தான். கரூரில் முதல்வரின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை.இங்கு செந்தில்பாலாஜியை தாண்டி உளவுத்துறை எதையும் தலைமைக்கு கொண்டு செல்வதில்லை. கரூரில் ஒவ்வொரு தொண்டர்கள் மீது தொடர்ந்து வழக்கு போட்டு கொண்டே இருக்கின்றனர்.
சட்டம் ஒழுங்கு மோசம்
தமிழகத்தில் எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்காது அது போல தான் தற்போதும் உள்ளது.திமுக எப்போது ஆட்சி வந்தாலும் குடும்பம் தான் ஆட்சி நடத்தும். இன்றைக்கு மின்சாரத் துறையில் புதிய ஊழலுக்கு வழிவகை செய்து கொண்டு உள்ளனர். சூரிய ஒளி மூலம் மின்சாரம் கொடுக்கும் திட்டம் கொண்டு வந்து தனியாருக்கு கொடுக்க முயற்சி செய்து வருவதாக தங்மணி குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள்
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..! மன்னிப்பு கேட்ட திமுக நிர்வாகிகள்..! புகார் மனு வாபஸ்