பெண் காவலருக்கு பாலியல் தொல்லை..! மன்னிப்பு கேட்ட திமுக நிர்வாகிகள்..! புகார் மனு வாபஸ்

By Ajmal Khan  |  First Published Jan 3, 2023, 9:31 AM IST

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் திமுக நிர்வாகிகள் மன்னிப்பு கேட்டதையடுத்து புகார் மனுவை பெண் காவலர் வாபஸ் பெற்றுள்ளார்.
 


பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

திமுக பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துனைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகியயோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

பெண் காவலருக்கு திமுக நிர்வாகி பாலியல் தொல்லை.! ஸ்டாலின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறி- இபிஎஸ்

 திமுக நிர்வாகி மீது புகார்

திமுக நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் சென்ற போது விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா தடுத்து நிறுத்தியதாகவும், திமுக நிர்வாகிகளை கைது செய்யக்கூடாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

மன்னிப்பு கேட்ட திமுக நிர்வாகிகள்

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் பெண் காவலர் புகார் கொடுத்த நிலையில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது திமுக நிர்வாகிகள் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் புகார் மனுவை வாபஸ் பெறுவதாக பெண் காவலர் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

திமுக ஆட்சி முடிவதற்குள் இன்னும் எத்தனை கொடுமைகளை மக்கள் அனுபவிக்க வேண்டுமோ..! ஸ்டாலினை சீண்டும் சசிகலா

click me!