பாஜகவிலிருந்து விலகினார் நடிகை காயத்ரி ரகுராம்.. போறபோக்கில் அண்ணாமலையை விளாசி விட்டு திமுகவில் இணைய திட்டமா?

By vinoth kumarFirst Published Jan 3, 2023, 8:02 AM IST
Highlights

தமிழக பாஜகவில் இருந்து 6 மாத காலம் நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக பாஜகவில் இருந்து 6 மாத காலம் நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, அவர் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் இருந்து வந்தார். இதனிடையே கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதாகக் கூறி  கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6  மாதம் நீக்கப்பட்டுவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். 

இதையும் படிங்க;- TN BJP : துபாய் ஹோட்டலில் 150 பேரு முன்னாடி.! உண்மையை சொல்லுங்க அண்ணாமலை? காயத்ரி ரகுராம் பகீர்!

இதனையடுத்து, காயத்ரி ரகுராம் அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை கூறி கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து விலகுவதாக  காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பான காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. இனி அண்ணாமலையை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை மீது காவல்துறையில் புகார் அளிக்க தயாராக உள்ளேன். நான் ஒரு வெளிநபரை போன்று விமர்சிக்கப்படுவதை நன்றாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார். 

I have taken the decision with heavy heart to resign from TNBJP for not giving opportunity for an enquiry, equal rights & respect for women. Under Annamalai leadership women are not safe. I feel better to be trolled as an outsider.
. .

— Gayathri Raguramm 🇮🇳🚩 (@Gayathri_R_)

 

 

மேலும், மோடி ஜி நீங்கள் சிறந்த நபர், நீங்கள் தேசத்தின் தந்தை, நீங்கள் எப்போதும் என் விஸ்வகுரு மற்றும் சிறந்த தலைவர். அமித்ஷா ஜி நீங்கள் எப்போதும் என் சாணக்கிய குருவாக இருப்பீர்கள் என குறிப்பிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் காயத்ரி ரகுராம் டேக் செய்துள்ளார்.

திமுகவில் முக்கிய பங்கு வகிக்கும் சபரீசனை தனியார் நட்சத்திர விடுதியில் காயத்ரி ரகுராம் சந்தித்து சுமார் 1 மணி நேரம் பேசியது அப்போது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- ஹனிட்ராப்! ரகசிய ஆடியோ & வீடியோவுக்கு காரணம் அண்ணாமலை தான் - உண்மையை உடைத்த காயத்ரி ரகுராம்!

click me!