வக்கிர புத்தி.. எந்த காலத்திலும் திமுக காரனுங்க திருந்தவே மாட்டானுங்க.. பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை! டிடிவி

By vinoth kumar  |  First Published Jan 3, 2023, 6:46 AM IST

எந்தக் காலத்திலும் தி.மு.க.வினர் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். காவல்துறையினருக்கே இந்த கதி என்றால், மற்ற பெண்களின் நிலை என்ன ஆகும்? 


பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவலர் கதறி அழுதும் மனமிறங்காத வக்கிர புத்தி கொண்டவர்களாக ஆளும் தி.மு.க.வினர் என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னையில் தி.மு.க பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த பெண் காவலருக்கு அக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.  

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அரிதாரம் பூசி நடிக்கும் திமுகவினரின் உண்மை முகம் இதுதான்... அம்பலப்படுத்தும் டிடிவி.தினகரன்..!

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவலர் கதறி அழுதும் மனமிறங்காத வக்கிர புத்தி கொண்டவர்களாக ஆளும் தி.மு.க.வினர் நடந்து கொண்டதாகவும், அவர்களைக் கைது செய்யவிடாமல் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதாகவும் வரும் செய்திகள் மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

 

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவலர் கதறி அழுதும் மனமிறங்காத வக்கிர புத்தி கொண்டவர்களாக ஆளும் தி.மு.க.வினர் நடந்து கொண்டதாகவும், அவர்களைக் கைது செய்யவிடாமல் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதாகவும் வரும் செய்திகள் மேலும் அதிர்ச்சியளிக்கிறது. (2/3)

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

 

 

எந்தக் காலத்திலும் தி.மு.க.வினர் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். காவல்துறையினருக்கே இந்த கதி என்றால், மற்ற பெண்களின் நிலை என்ன ஆகும்? இதற்கு தி.மு.க.வின் தலைவரும், இளைஞர் அணி செயலாளரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?  என  டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;-  எனது வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டாங்க சொன்னீங்க.. இப்ப என்ன சொல்றீங்க.. ஸ்டாலினை சீண்டும் தினகரன்.!

click me!