திமுக ஆட்சி முடிவதற்குள் இன்னும் எத்தனை கொடுமைகளை மக்கள் அனுபவிக்க வேண்டுமோ..! ஸ்டாலினை சீண்டும் சசிகலா

By Ajmal Khan  |  First Published Jan 3, 2023, 8:49 AM IST

சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலர் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவினருக்கு கடும் கண்டனம். பாதிக்கப்பட்ட பெண் காவலருக்கு விரைவில் நியாயம் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பெண் காவலருக்கு பாலியல் தொல்லை

பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவல் தொடர்பாக சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினர் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் காவலர் மீது, திமுகவைச் சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இதில் பாதிக்கப்பட்ட பெண் காவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. தமிழக காவல்துறை ஆளுங்கட்சியினரின் அராஜக செயல்களுக்கு துணை நிற்காமல், தவறு இழைத்த திமுகவினர் மீது பாரபட்சமின்றி உடனே நடவடிக்கையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பெண் காவலருக்கு நியாயம் கிடைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Tap to resize

Latest Videos

உதயநிதிக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கியது பாராட்டுக்குறியது..! சிறப்பாக செயல்படுவார்- செல்லூர் ராஜூ நம்பிக்கை

இது தான் திராவிட மாடலா.?

இன்றைய ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் இப்பொழுது பெண் காவலருக்கே பாதுகாப்பற்ற நிலைமை காணமுடிகிறது. இந்த ஆட்சி முடிவதற்குள் தமிழக மக்கள் இன்னும் எத்தனை கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் போது மிகவும் வேதனை அளிக்கிறது. திமுகவின் தலைமைக்கோ தங்கள் சொந்த கட்சியினரையே கட்டுப்படுத்த முடியாதபோது எவ்வாறு தமிழக மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக? இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சி என்று மேடைக்கு மேடை சொல்லிக்கொண்டு, நம் திராவிட மண்ணில் உள்ள பெண்களை சிறுமைப்படுத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்றைக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

பாஜகவிலிருந்து விலகினார் நடிகை காயத்ரி ரகுராம்.. போறபோக்கில் அண்ணாமலையை விளாசி விட்டு திமுகவில் இணைய திட்டமா?

பாதுகாப்பை உறுதி செய்திடுக

இதுபோன்று பெண்களை இழிவு படுத்தும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

வக்கிர புத்தி.. எந்த காலத்திலும் திமுக காரனுங்க திருந்தவே மாட்டானுங்க.. பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை! டிடிவி

click me!