7ஆம் தேதியே உரைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்.! அம்பேத்கர் பெயரையே உச்சரிக்க மறுத்தது ஏன்.!தங்கம் தென்னரசு கேள்வி

Published : Jan 09, 2023, 02:02 PM ISTUpdated : Jan 09, 2023, 02:31 PM IST
7ஆம் தேதியே உரைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர்.! அம்பேத்கர் பெயரையே உச்சரிக்க மறுத்தது ஏன்.!தங்கம் தென்னரசு கேள்வி

சுருக்கம்

அம்பேத்கருடைய பேரைக் கூட உச்சரிக்காமல் ஆளுநர் புறக்கணித்துள்ளதாகவும், சமூகநீதி,சமத்துவம்,பெண்ணடிமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் உள்ளடக்கிய  வார்த்தைகளை ஆளுநர் உறையில் தவிர்த்து உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு உரிய மரியாதை

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது தமிழக ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுக்கும் வகையில் அவருடைய செயல்பாடுகளில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் ஆளுநர் உரையை நடத்தும் போது எந்தவித எதிர்ப்பையும் நாங்கள் தெரிவிக்காமல் இருந்ததாக கூறினார்.  ஜனநாயக ரீதியில் ஆளுநருக்கு உரிய மரியாதையே அரசின் சார்பில் தந்துள்ளதாக தெரிவித்தார்.

அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர்..! மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

அம்பேத்கர் பெயரை உச்சரிக்க மறுப்பு

ஆனால்  ஆளுநர் தனது உரையை வாசிக்கும் போது நடைமுறைக்கு மாறாக சட்ட விதிகளுக்கு மாறாக அவைகளை மீறக்கூடிய வகையில் அரசியலமைப்பின் விதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் ஆளுநர் இன்றைக்கு உரையினை வாசித்துள்ளார். மிகவும் வருத்தம் அளிக்கிறது. அம்பேத்கருடைய பேரைக் கூட உச்சரிக்காமல் ஆளுநர் புறக்கணித்துள்ளார்.  இன்றைய ஆளுநர் உரையை தவிர்த்தது அரசு உடைய கொள்கைகளை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  சமூகநீதி சமத்துவம்,பெண்ணடிமை ஒழிப்பு, மத நல்லிணக்கம் உள்ளடக்கிய வளர்ச்சியை இவை எல்லாம் மேற்கொள்ள கூடிய வார்த்தைகளை ஆளுநர் உறையில் தவிர்த்து உள்ளார்.

7 ஆம் தேதியே ஒப்புதல்

தேசிய கீதம் பாடி முடிப்பதற்கு  முன்பாகவே அதிமுக சென்றது அவை மரபுகளை மீறி முறையில் செயல்பட்டுள்ளார்கள். 5-ம் தேதி முதலமைச்சரும் ஒப்புதல் அளித்து 5-ம் தேதி ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. 7 தேதி ஆளுநர் உரையை ஒப்புதல் அளித்துள்ளார். அதற்கான ஆதாரம்  அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் கொள்கை வேறு ,ஆளுநர் சட்டமன்றத்தின் அரசின் கொள்கைக்கு மாற செயல்படுவது ஏற்புடையது அல்ல என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

தேசிய கீதத்தை அவமதித்த ஆளுநர்.! இனியும் பதவியில் நீடிக்க கூடாது.! முற்றுகை போராட்டத்திற்கு தேதி குறித்த திருமா

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!